கணவருடன் ‘பாரதி கண்ணம்மா’ பரினாவின் கர்ப்பகால போட்டோஷூட் – வைரல் பதிவு!
விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் மிரட்டலான வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பரினா தனது கணவருடன் இணைந்து முதன் முதலாக கர்ப்பகால போட்டோ சூட் புகைப்படங்களை எடுத்துள்ளதாக ஒரு பதிவு பகிர்ந்துள்ளார்.
போட்டோ சூட்
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நடிகையாக உருவெடுத்திற்கும் பரினா தற்போது ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மிரட்டலான வில்லி கதாப்பாத்திரத்தில் கலக்கி வருகிறார். தனது வில்லத்தனமான நடிப்பால் பல்வேறு ரசிகர்களது ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் வாங்கி வரும் இவர் நிஜத்தில் மிகவும் மென்மையான சுபாவம் கொண்டவர். பரினாவுக்கு புதிய அடையாளத்தை பெற்று தந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு முன்பாகவே இவருக்கு திருமணம் முடிந்து விட்டது.
பாக்கியாவின் நிலைமையை பார்த்து வருத்தப்படும் எழில் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
அந்த வகையில் திருமணமான 4 ஆண்டுகள் கழித்து பரினா தற்போது கர்ப்பமாக உள்ளார். பிரசவ காலம் நெருங்குகிற போதிலும் ரசிகர்களை மகிழ்விக்க தொடர்ந்து சீரியலில் நடித்து கொண்டிருக்கிறார் இவர். பரினாவும் மற்ற சீரியல் மற்றும் சினிமா நடிகர், நடிகைகளை போலவே வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதன் படி அவ்வப்போது அவர் எடுக்கும் புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்கள் ஆகியவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் பகிர்ந்து வருவது இவரது வழக்கமாகும்.
TN Job “FB
Group” Join Now
அந்த வகையில் தற்போது பிரசவத்துக்காக காத்திருக்கும் பரினா வயிற்றில் மருதாணியிட்டு சமீபத்தில் தனது கர்ப்பகால புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் முதன் முதலாக தனது கணவருடன் சேர்ந்து கர்ப்பகால போட்டோ சூட் செய்துள்ளார் பரினா. இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரி பதிவு மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.