5 வது முறை உலக கோப்பையை வெல்லுமா இந்திய U19 அணி? இன்று பைனலில் இங்கிலாந்துடன் மோதல்!

0
5 வது முறை உலக கோப்பையை வெல்லுமா இந்திய U19 அணி? இன்று பைனலில் இங்கிலாந்துடன் மோதல்!
5 வது முறை உலக கோப்பையை வெல்லுமா இந்திய U19 அணி? இன்று பைனலில் இங்கிலாந்துடன் மோதல்!
5 வது முறை உலக கோப்பையை வெல்லுமா இந்திய U19 அணி? இன்று பைனலில் இங்கிலாந்துடன் மோதல்!

2022 ஆண்டுக்கான ஜூனியர் உலக கோப்பை தொடருக்கான இறுதி போட்டி இன்று ஆண்டிகுவாவில் உள்ள சார் விவியன் ரிச்சார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இறுதிப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டி:

ஜனவரி 14ஆம் தேதி 2022 ஆண்டுக்கான ஜூனியர் உலக கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 16 அணிகள் இடம் பெற்றுள்ளன. இத்தொடரில் இந்திய அணி அனைத்து லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. பிப்ரவரி 2 ஆம் தேதி ஆண்டிகுவாவில் உள்ள கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் ஐசிசி யு-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய ஜூனியர் அணி ஆஸ்திரேலியா ஜூனியர் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தமிழகத்தில் பிப்ரவரி மாதம் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை – முக்கிய காரணம் இதோ!

பிப்ரவரி 1 ஆம் தேதி நடைபெற்ற மற்றோரு அரையிறுதி ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபிகானிஸ்தானை வென்றது. இதனை தொடர்ந்து இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று பிப்ரவரி 5 ஆம் தேதி ஆண்டிகுவாவில் உள்ள சார் விவியன் ரிச்சார்ட்ஸ் மைதானத்தில் மாலை 6.30 மணிக்கு தொடங்கவுள்ளது. சார் விவியன் ரிச்சார்ட்ஸ் மைதானத்தில் இதுவரை நடந்த போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதால் இன்று நடக்கும் இறுதிப்போட்டிக்கு இரு அணிகளும் தலா 2 ஸ்பின்னர்களுடன் களம் இறங்க உள்ளன. எனவே இம்முறை 2022 ஆண்டுக்கான ஜூனியர் உலக கோப்பையை 5வது முறையாக மீண்டும் இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதிய உயர்வு – 18 மாத DA நிலுவைத்தொகை! ஒரே நேரத்தில் வருமா?

இந்தியா கணிக்கப்பட்ட பிளேயிங் 11: ஹர்னூர் சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஷேக் ரஷீத், யாஷ் துல் (கேப்டன்), சித்தார்த் யாதவ், ராஜ் பாவா, கவுஷல் தம்பே, தினேஷ் பனா (வாரம்), ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், விக்கி , ரவிக்குமார்

இங்கிலாந்து கணிக்கப்பட்ட பிளேயிங் 11: ஜார்ஜ் தாமஸ், ஜேக்கப் பெத்தேல், டாம் பெர்ஸ்ட் (கேப்டன்), ஜேம்ஸ் ரெவ், வில்லியம் லக்ஸ்டன், ஜார்ஜ் பெல், , ரெஹான் அகமது, அலெக்ஸ் ஹார்டன் (வாரம்), தாமஸ் ஆஸ்பின்வால், ஜேம்ஸ் விற்பனை, ஜோசுவா பாய்டன்

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!