சில மணி நேரத்தில் சென்னை டூ பெங்களூருக்கு பயணம் – ரயில்வேயின் சூப்பர் திட்டம்!!

0
சில மணி நேரத்தில் சென்னை டூ பெங்களூருக்கு பயணம் - ரயில்வேயின் சூப்பர் திட்டம்!!

சென்னையில் இருந்து பெங்களூருக்கு சில மணி நேரத்திலேயே பயணிக்கும் வகையில் ரயிலின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தெற்கு ரயில்வே:

பேருந்தை கட்டிலும் ரயில் கட்டணம் மிகவும் குறைவு என்பதனால் தினமும் லட்சணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். அந்த வகையில், ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் ஏகப்பட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. தற்போது அதிவேக பயணத்தை உறுதி செய்யும் விதமாக இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகின்றன.

இந்த வகையில் தற்போது எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தையும் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் உயர்த்த தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதில் முதற்கட்டமாக சென்னை – பெங்களூர் – மைசூர் உள்ளிட்ட வழித்தடங்களில் இயங்கும் ரயிலின் வேகத்தை 200 கிலோ மீட்டர் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகளை ரயில்வே நிர்வாகம் தற்போது தொடங்கி விட்டதாகவும், சென்னை டு பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே சாலைக்கு அருகிலேயே புல்லட் ரயிலுக்கான வழித்தடமும் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைதூரம் பயணம் செய்யும் பயணிகளுக்கு இந்த புல்லட் ரயில்கள் மிகவும் உபயோகமாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!