இந்திய தபால் துறையில் எழுத்துத் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு – 38,926 காலிப்பணியிடங்கள்!

0
இந்திய தபால் துறையில் எழுத்துத் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு - 38,926 காலிப்பணியிடங்கள்!
இந்திய தபால் துறையில் எழுத்துத் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு - 38,926 காலிப்பணியிடங்கள்!
இந்திய தபால் துறையில் எழுத்துத் தேர்வில்லாமல் வேலைவாய்ப்பு – 38,926 காலிப்பணியிடங்கள்!

இந்திய தபால் துறை கிராம தபால் ஊழியர் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதார்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு

இந்திய தபால் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சல் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற கிராம தபால் ஊழியர் (BPM) மற்றும் உதவி கிராம தபால் ஊழியர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தமாக 38,926 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் இதில் தமிழகத்தில் 4,310 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியில் விண்ணப்பதாரர்களை தேர்ந்தெடுக்க எந்தவித எழுத்து தேர்வும் நடத்தப்படுவதில்லை. இப்பணிக்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள் வருகிற ஜூன் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாளில் ராதிகாவிடம் மாட்டிக் கொள்ளப் போகும் கோபி – ப்ரோமோ ரிலீஸ்!

இப்பணிக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் சைக்கிள் ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும். இதில் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. இதில் கிராம தபால் ஊழியர் பணியிடத்திற்கு ரூ.12,000 மாத சம்பளமும் உதவி கிராம தபால் ஊழியர் பணியிடத்திற்கு ரூ.10,000 மாத சம்பளமும் வழங்கப்படுகிறது.

இதில் தகுதியான நபர்கள் 10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைன் மூலமாக பதிவு செய்யலாம். இதற்கு விண்ணப்பக் கட்டணமாக பொது பிரிவினராக இருப்பின் ரூ.100 செலுத்த வேண்டும். அத்துடன் SC/ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு உள்ளிட்டவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை. மேலும் இது தொடர்பான விவரங்களை அறிய https://indiapostgdsonline.gov.in/Notifications/Model_Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!