இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023 – 12828 GDS காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.29,380/-

0
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023 - 12828 GDS காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.29,380/-
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023 - 12828 GDS காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.29,380/-
இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023 – 12828 GDS காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.29,380/-

அகில இந்திய அளவில் Gramin Dak Sevak (BPM/ABPM) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அஞ்சல் துறை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 12828 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11-06-2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் இந்திய அஞ்சல் துறை
பணியின் பெயர் Gramin Dak Sevak (BPM/ABPM)
பணியிடங்கள் 12828
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
அஞ்சல் துறை காலிப்பணியிடங்கள்:

நாடு முழுவதும் Gramin Dak Sevak (BPM/ABPM) பதவிக்கு என 12828 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 18 பணியிடங்கள் காலியாக உள்ளன.

GDS வயது வரம்பு:

இந்திய தபால் அலுவலக ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 11-ஜூன்-2023 அன்று குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 40 வயதுடையவராக இருக்க வேண்டும்.

வயது தளர்வு:
  • OBC விண்ணப்பதாரர்கள்: 03 ஆண்டுகள்
  • SC/ST விண்ணப்பதாரர்கள்: 05 ஆண்டுகள்
  • PWD விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்
  • PWD (OBC) விண்ணப்பதாரர்கள்: 13 ஆண்டுகள்
  • PWD (SC/ST) விண்ணப்பதாரர்கள்: 15 ஆண்டுகள்
கல்வி தகுதி:

இந்திய அஞ்சல் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்களில் இருந்து 10வது முடித்திருக்க வேண்டும்.

TNPSC குரூப் 4 தேர்வு மூலமாக 30ஆயிரம் பணியிடங்கள் நிரப்புதல் – வலுக்கும் கோரிக்கை!

India Post சம்பள விவரம்:
  • Gramin Dak Sevak (Branch Postmaster) – ரூ. 12,000 – 29,380/-
  • Gramin Dak Sevak (Assistant Branch Postmaster) – ரூ. 10,000 – 24,470/-
விண்ணப்பக் கட்டணம்:

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களும்: ரூ.100/-
பெண்/SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் கிடையாது
பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

தேர்வு செயல் முறை:

1. Merit list

2. Certificate Verification

விண்ணப்பிக்கும் முறை:

அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 22.05.2023 முதல் 11.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!