இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் பொறியியல் படித்தவர்க்கு காத்திருக்கும் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்..!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Engineers / Officers & Graduate Apprentice engineers பணிக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Indian Oil Corporation Limited (IOCL) |
பணியின் பெயர் | Engineers / Officers & Graduate Apprentice engineers |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 22.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
IOCL காலிப்பணியிடங்கள்:
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தில் Engineers / Officers & Graduate Apprentice engineers பணிகளுக்கு என்று மொத்தமாக பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
IOCL கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E / B.Tech / M.E / M.Tech டிகிரி முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
மேலும் விண்ணப்பதாரர்கள் GATE 2022 தேர்வுகளில் Chemical Engineering / Civil Engineering / Computer Sc & Engineering / Electrical Engineering / Instrumentation Engineering / Mechanical Engineering / Metallurgical Engineering பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
IOCL வயது வரம்பு:
General / EWS பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 26 வயது அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு அளிக்கப்படும் வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.
Tamil Nadu’s Best TNPSC Coaching Center
IOCL ஊதிய தொகை:
மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் மாதம் குறைந்தது ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,60,000/- வரை ஊதிய தொகை பெறுவார்கள். மேலும் இத்துடன் வழங்கப்பட உள்ள கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.
IOCL தேர்வு முறை:
- GATE 2022 Mark.
- Group Discussion(GD).
- Group Task (GT).
- Personal Interview (PI).
- Merit List.
IOCL விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் உடனே இப்பதிவின் இறுதியில் உள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.