இந்தியன் வங்கியில் காத்திருக்கும் புதிய வேலை – ரூ.15,000/- ஊதியம் || உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!  

0
இந்தியன் வங்கியில் காத்திருக்கும் புதிய வேலை - ரூ.15,000/- ஊதியம் || உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!  

இந்தியன் வங்கி (Indian Bank) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் IBTRD நிறுவனத்தில் Financial Literacy Counsellor பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் 02 முதல் 05 ஆண்டு கால வரையிலான ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Indian Bank
பணியின் பெயர் Financial Literacy Counsellor
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 26.12.2023
விண்ணப்பிக்கும் முறை Offline

IBTRD காலிப்பணியிடங்கள்:

இந்தியன் வங்கியின் (Indian Bank) IBTRD நிறுவனத்தில் காலியாக உள்ள Financial Literacy Counsellor பணிக்கென 01 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Financial Literacy Counsellor பணிக்கான தகுதி:

Financial Literacy Counsellor பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் Officer, Middle Management பதவிகளில் குறைந்தது 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Financial Literacy Counsellor வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 65 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

Financial Literacy Counsellor ஊதியம்:

இந்த IBTRD நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.15,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

IBTRD தேர்வு முறை:

Financial Literacy Counsellor பணிக்கு தகுதியான நபர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IBTRD விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 26.12.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!