இந்திய ஜனாதிபதி மார்ச் 18 தமிழகம் வருகை – முன்னேற்பாடுகள் தீவிரம்!

0
இந்திய ஜனாதிபதி மார்ச் 18 தமிழகம் வருகை - முன்னேற்பாடுகள் தீ
இந்திய ஜனாதிபதி மார்ச் 18 தமிழகம் வருகை - முன்னேற்பாடுகள் தீ
இந்திய ஜனாதிபதி மார்ச் 18 தமிழகம் வருகை – முன்னேற்பாடுகள் தீவிரம்!

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கன்னியாகுமரி வருகை புரியவுள்ளார். இதனை முன்னிட்டு அம்மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் ஒத்திகை நடைபெற்று வருகிறது.

ஹெலிகாப்டர் ஒத்திகை:

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மார்ச் 18ம் தேதி முதன் முறையாக கன்னியாகுமரி வருகை புரியவுள்ளார். இவர் 18 ம் தேதி காலை 12.30 மணிக்கு கடல் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் நினைவு மண்டபத்தை தனி படகு மூலம் சென்று சுற்றி பார்க்கவுள்ளார். அதன் பிறகு கன்னியாகுமரி சுற்றுலா மண்டபத்திற்கு செல்லவுள்ளார்.

தமிழக மக்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல இதை செய்ய வேண்டும்- அரசு அலுவலர்களுக்கு முதல்வரின் அறிவுரை!

மேலும் அன்றைய தினம் மாலை 3 மணிக்கு விவேகானந்தா கேந்திரா சென்று ராமாயண தரிசன சித்திர கூடத்தை பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது வருகையை முன்னிட்டு தற்போது கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் ஒத்திகை நிகழ்வு நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் பார்வையிடப்படவுள்ள பகுதிகளை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே குடியரசு தலைவர் கடந்த மாதம் தமிழகத்தில் மதுரை மற்றும் கோயம்புத்தூருக்கு வருகை புரிந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது கன்னியாகுமரி வரவுள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!