இந்தியாவில் ஒரே நாளில் 45,352 பேருக்கு கொரோனா உறுதி – 366 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 45,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 366 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்து பரவி வருகிறது. கடந்த மார்ச் மாதம் பரவ தொடங்கிய இரண்டாம் அலை இன்னும் ஓயவில்லை. கடந்த 24 நேரத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 45,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,29,03,289 ஆக அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் நடவடிக்கையாக அனைத்து மாநிலங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும் அமலில் உள்ளது.
செப்.16 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இந்த நிலையில் நேற்று புதிதாக 399 கொரோனா நோயாளிகள் சிகிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மொத்தமாக நாட்டில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,39,895 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் 2 டோஸ்களாக மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 67,09,59,968 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை மத்திய, மாநில அரசுகள் நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது
TN Job “FB
Group” Join Now
அதனை தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 34,791 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 3,20,63,616 ஆக உயர்ந்துள்ளது. மேலும் குணமடைந்தோர் விகிதம் 97.45% ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,99,778 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.