இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,941 பேருக்கு தொற்று உறுதி – 350 பேர் பலி!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் புதிதாக 350 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
பாதிப்பு நிலவரம்:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமெடுத்து பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30,941 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,27,68,880 ஆக உயர்ந்துள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 59,62,286 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 59,62,286 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
வாடகை வீடுகளின் உரிமையாளர்கள் கவனத்திற்கு – காவல்துறை ஆணையர் உத்தரவு!
இந்த நிலையில் உயிரிழப்புகள் குறைந்தபாடில்லை புதிதாக 350 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் 4,38,560 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கொரோனா இரண்டாம் அலை முழுமையாக குறையாத நிலையில் மூன்றாம் அலை அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
TN Job “FB
Group” Join Now
தொற்றில் இருந்து ஒரே நாளில் 36,275 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,19,59,680 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,70,640 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.