இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,072 பேருக்கு கொரோனா – 389 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 389 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 25,072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,34,756 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நோய் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என்ற இலக்கை மையமாக வைத்து மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 58,25,49,595 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Tokyo 2020 Paralympic போட்டிகள் – இந்தியா சார்பில் 54 வீரர்கள் பங்கேற்பு!
இந்த நிலையில் நாட்டில் ஒரே நாளில் 389 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த பலி எண்ணிக்கை 4,34,756 ஆக அதிகரித்துள்ளது. தற்போது இந்தியா முழுவதும் டெல்டா பிளஸ் வைரஸ் பரவி வருகிறது. இவ்வகை வைரஸ் அதிக வீரியத்துடன் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. டெல்டா பிளஸ் வைரஸ் இந்தியாவில் இருந்து மற்ற நாடுகளுக்கும் விரைவாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
TN Job “FB
Group” Join Now
அதனை தொடர்ந்து இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 44,157 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து உள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,16,80,626 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 3,33,924 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.09% ஆக குறைந்துள்ளது. கடந்த நாட்களை விட தற்போது உயிரிழப்புகள் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.