Ind Vs Wi T20 தொடர்: ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி வீரர்கள் அறிவிப்பு! கோலி, பும்ரா நீக்கம்!

0
Ind Vs Wi T20 தொடர்: ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி வீரர்கள் அறிவிப்பு! கோலி, பும்ரா நீக்கம்!
Ind Vs Wi T20 தொடர்: ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி வீரர்கள் அறிவிப்பு! கோலி, பும்ரா நீக்கம்!
Ind Vs Wi T20 தொடர்: ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி வீரர்கள் அறிவிப்பு! கோலி, பும்ரா நீக்கம்!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணி வீரர்களின் விவரங்களை BCCI வெளியிட்டுள்ளது. அதன்படி பல இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ள இந்த அணியை ரோஹித் ஷர்மா வழிநடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி

வரும் 22ம் தேதி முதல் இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) அகில இந்திய மூத்த தேர்வுக்குழு நேற்று (ஜூலை 14) அறிவித்தது. அந்த வகையில் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அணியில் இல்லாத நிலையில் கேப்டனாக இருந்து ரோஹித் சர்மா அணியை வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த மாதம் காயம் காரணமாக விலகியிருந்த கேஎல் ராகுல் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார்.

Exams Daily Mobile App Download

இருப்பினும், அவர் விளையாடும் 11 அணியில் சேர்க்கப்படுவது உடற்தகுதிக்கு உட்பட்டது. இது தவிர மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினும் அணிக்கு திரும்பி இருக்கிறார். அதே நேரத்தில் லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் அணியில் இடம் பெறவில்லை. தவிர, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கான டி20 அணியில் இடம் பெற்றுள்ளனர். அந்த வகையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடர் வரும் ஜூலை 29ம் தேதி தொடங்குகிறது.

IND vs WI: T20I அணியில் முக்கிய மாற்றம் – ருதுராஜ் கெய்க்வாட் & தீபக் ஹூடா சேர்ப்பு! ரசிகர்கள் உற்சாகம்!

இந்த டி20 போட்டிக்கு முன்னதாக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. அதனால் மூத்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இந்திய அணியை வழிநடத்த இருக்கிறார். இப்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பிடிக்க பல வீரர்கள் முயற்சித்து வரும் நிலையில் இந்த தொடர்களில் இளம் வீரர்கள் சிறப்பாக பங்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்திய அணி:

ரோகித் சர்மா (C), இஷான் கிஷன், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷ்ரேயாஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஆர்.அஷ்வின், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here