IND VS WI: மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பிய கீமர் ரோச் – ரசிகர்கள் உற்சாகம்!

0
IND VS WI: மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பிய கீமர் ரோச் - ரசிகர்கள் உற்சாகம்!
IND VS WI: மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பிய கீமர் ரோச் - ரசிகர்கள் உற்சாகம்!
IND VS WI: மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு திரும்பிய கீமர் ரோச் – ரசிகர்கள் உற்சாகம்!

வெஸ்ட் இண்டீஸ் இந்தியா இடையிலான ஒரு நாள் மற்றும் T20 போட்டிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் , வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் 15 வீரர்கள் கொண்ட ஒரு நாள் அணியை இன்று அறிவித்துள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் கீமர் ரோச் பெயர் இடம்பெற்றுள்ளார் .

IND VS WI:

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 T20 போட்டிகளில் விளையாட உள்ளது. ஒருநாள் தொடர் பிப்ரவரி 6,9,11 ஆகிய தேதிகளிலும், டி20 தொடர் பிப்ரவரி 16,18,20 ஆகிய தேதிகளிலும் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு போலார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 T20 போட்டிகளில் விளையாடி 2 யில் தோல்வியடைந்து தொடரை நழுவ விட்டது குறிப்பிடத்தக்கது. இன்று போலார்ட் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வேகப்பந்து வீச்சாளர் கீமர் ரோச் பெயர் இடம் பெற்றுள்ளது .

மீண்டும் வேகப்பந்து வீச்சாளர் கீமர் ரோச் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளார். ரோச் இதுவரை 92 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 124 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி வந்த கீமர் ரோச் 2019 ஆண்டு பங்களாதேசத்துடன் தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடினார். இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளார். எனவே இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் பௌலிங் யூனிட்டில் ரோச்சின் பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. இத்தொடரில் இந்திய ஒயிட் பால் கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா இடம்பெற்று அணியை வழிநடத்துவார் என்று BCCI தெரிவித்துள்ளது. மேலும் ரோஹித் சர்மா ஹாம்ஸ்ட்ரிங் இஞ்சூரியில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரிவித்தது.

Post Office இல் ஆண் குழந்தைக்களுக்காக சூப்பரான சேமிப்பு திட்டம் – முழு விபரங்கள் இதோ!

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணி: கீரன் பொல்லார்ட் (கேட்ச்), கீமர் ரோச், நக்ருமா பொன்னர், பிராண்டன் கிங், ஃபேபியன் ஆலன், டேரன் பிராவோ, ஷமர் ப்ரூக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அக்கேல் ஹோசைன், அல்ஸாரி ஜோசப், நிக்கோலஸ் பூரன், ரொமாரியோ ஸ்மித், ஒடியன் ஷெப்பர்ட், ஹைடன் வால்ஷ் ஜூனியர்

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!