IND vs ENG 3rd Test: 71வது சதத்தை பதிவு செய்வார் விராட் கோஹ்லி – பயிற்சியாளர் நம்பிக்கை! 

0
IND vs ENG 3rd Test 71வது சதத்தை பதிவு செய்வார் விராட் கோஹ்லி - பயிற்சியாளர் நம்பிக்கை! 

IND vs ENG 3rd Test: 71வது சதத்தை பதிவு செய்வார் விராட் கோஹ்லி – பயிற்சியாளர் நம்பிக்கை! 

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டியில் விராட் கோஹ்லி சதம் அடிப்பார் என பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். ரசிகர்களும் விராட் கோஹ்லியின் ரன் வேட்டையை காண ஆவலாக உள்ளனர்.

IND vs ENG டெஸ்ட் போட்டிகள் :

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் மழை காரணமாக ஆட்டம் டிராவில் முடிய, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. ஆனாலும், இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கேப்டன் கோஹ்லி, புஜாரா மற்றும் ஆல் ரவுண்டர் ஜடேஜா என யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. லோயர் ஆர்டர் பேட்ஸ்மன்களான ஷமி-பும்ராஹ் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

IND vs ENG 3வது டெஸ்ட் போட்டி – 3 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு? வெளியான தகவல்!

இந்த தோல்வியால் இங்கிலாந்து அணியில் மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், இந்திய அணியில் மாற்றங்கள் நிகழுமா என கேள்வி எழுந்தது. இரண்டு போட்டியிலும் அதிகம் ஜொலிக்காத புஜாராவிற்கு பதிலாக அதிரடி பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. மேலும் ஆல் ரவுண்டர் ஜடேஜாவிற்கு பதிலாக மற்றொரு ஆல் ரவுண்டர் அஷ்வின் அணியில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

களைகட்டும் ஐபிஎல் 2021 – பயிற்சியை தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள்!

இவை அனைத்திற்கும் மேலாக இந்திய கேப்டன் கோஹ்லி ரன் குவிக்க தடுமாறுவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ரன் மெஷின், சேஸ் மாஸ்டர் என புகழப்படும் கோஹ்லிக்கு இந்த டெஸ்ட் சரியாக அமையவில்லை. அதிகம் தடுப்பாட்டத்தில் தான் கவனத்தை செலுத்துகிறார். வழக்கமான கோஹ்லியின் ஆக்ரோஷத்தை களத்தில் காண முடியவில்லை. இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை வெறும் 62 ரன்களே எடுத்துள்ள கோஹ்லி தனது பார்மிற்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்து தான் பௌலராக மாறினேன் – மனம் திறந்த வருண் சக்கரவர்த்தி!

கடந்த 2019ம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச அரங்கில் சதம் அடிக்காத கோஹ்லி இந்த 3வது டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய அளவில் தனது சதத்தை பதிவு செய்வார் என கோஹ்லியின் குழந்தை பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது வரை கோஹ்லி ஒரு நாள் அரங்கில் 43 சதங்களும், டெஸ்ட் அரங்கில் 27 சதங்களும் என மொத்தமாக 70 சதங்கள் அடித்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!