தமிழக சுகாதாரத்துறை எடுத்த முக்கிய முடிவு – ரத்த மாதிரிகள் பரிசோதனை!
கொரோனா பாதித்தவர்களின் ரத்த மாதிரியை எடுத்து அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா? அல்லது குறைந்துள்ளதா? என்ற ஆய்வை மீண்டும் துவங்க உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தி:
மாநிலத்தில் கொரோனாவின் இரண்டாம் அலை பரவல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு காரணம் அரசின் முறையான கட்டுப்பாடுகளும், தடுப்பூசி செலுத்துதலும் தான் என்று மாநில சுகாதார குழு அண்மையில் தகவல் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை சார்பில், இதற்கு முன்னால் ஒரு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு ஊதியம் நிறுத்தம் – உத்தரவு வெளியீடு!
இதில் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா? அல்லது குறைந்துள்ளதா? என பார்க்கப்பட்டு 3-ம் கட்ட சர்வே முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 62.2 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் மாநிலத்தில் அதிகமாக விருதுநகர் மாவட்டத்தில் 84 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது கண்டறியப்பட்டது. குறைந்தபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 37 சதவீதம் பேருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
மேலும், குறைவாக உள்ள மாவட்டங்களில் நாகை, நாமக்கல் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் எல்லாம் இணைந்துள்ளது. இங்கெல்லாம் தடுப்பூசிகள் செலுத்துதலை அதிகப்படுத்த சுகாதாரத்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து இந்த ஆய்வின் சர்வே முடிவை வைத்து மாவட்டங்களில் ரத்த ஆய்வை மேற்கொண்டு, நோயெதிர்ப்பு தாக்கம் குறித்த முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.