சென்னை: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 ஆக விற்பனை – வாகன ஓட்டிகள் கவலை!

0
சென்னை: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 ஆக விற்பனை - வாகன ஓட்டிகள் கவலை!
சென்னை: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 ஆக விற்பனை - வாகன ஓட்டிகள் கவலை!
சென்னை: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 ஆக விற்பனை – வாகன ஓட்டிகள் கவலை!

நாளுக்கு நாள் சந்தை நிலவரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்படும் பெட்ரோல் விலை, இன்றைய காலை நிலவரப்படி லிட்டருக்கு ரூ. 102.63 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

பெட்ரோல் விலை:

தினசரி வாழ்வில் நாம் அன்றாடம் நமது தேவைகளுக்காக பயணத்தை மேற்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இதற்காக முன்னதாக பொதுப்போக்குவரத்துகளை மட்டுமே மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது அனைவரும் தனித்தனியாக வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் வாகனத்திற்கான எரிபொருள் தேவை அதிகமாக இருக்கிறது. தேவை அதிகரிக்கும் பட்சத்தில் எந்த ஒரு பொருளுக்கும் அதிக அளவில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதனால், தான் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை உயர்வை சந்தித்து வருகின்றனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதிலும், தினசரி காலை 6 மணிக்கு பெட்ரோல் விலை நிலவரம் அப்டேட் செய்யப்படும். சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றத்திற்கு ஏற்றபடி, சென்னையில் விலை மாற்றப்படும். குறிப்பாக, இறக்குமதி மற்றும் தேவைகளை பொறுத்து சென்னையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

WhatsApp அக்கவுண்ட்டை நிரந்தரமாக நீக்க வேண்டுமா? – எளிய வழிமுறைகள் இதோ!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு வரை சதத்தை தொடாத பெட்ரோல் விலை சில வாரங்களாக லிட்டருக்கு விலை ரூ,100 ஐ கடந்துள்ளது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 102.63 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தற்போது செப்டம்பர் 13ம் தேதியான இன்றைய காலை 6 மணி நிலவரப்படி அதே விலையில் மாற்றம் இன்றி லிட்டருக்கு பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 94.24 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் விலை ரூ.100 ஐ கடந்ததில் இருந்து வாகன ஓட்டிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!