WhatsApp அக்கவுண்ட்டை நிரந்தரமாக நீக்க வேண்டுமா? – எளிய வழிமுறைகள் இதோ!

0
WhatsApp அக்கவுண்ட்டை நிரந்தரமாக நீக்க வேண்டுமா? – எளிய வழிமுறைகள் இதோ!
WhatsApp அக்கவுண்ட்டை நிரந்தரமாக நீக்க வேண்டுமா? – எளிய வழிமுறைகள் இதோ!
WhatsApp அக்கவுண்ட்டை நிரந்தரமாக நீக்க வேண்டுமா? – எளிய வழிமுறைகள் இதோ!

உலகம் முழுவதும் உள்ள பல கோடிக்கணக்கான மக்களும் செய்திகளை பகிர்ந்து கொள்வதற்காக வாட்ஸ்அப் செயலியை தான் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், தங்களது வாட்ஸ்அப் கணக்கை நிரந்தமாக டெலீட் செய்வதற்கான வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

WhatsApp செயலி:

வாட்ஸ்அப் செயலியானது தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்களால் அதிக அளவில் பயன்படுத்தும் செயலியாக உள்ளது. இதனால் பயனர்களின் வசதிக்காகவும், அவர்களை தக்க வைப்பதற்காகவும் செயலியானது பல புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், இன்ஸ்டாகிராம் செயலியை போன்று பயனர்களின் அவதார் உருவ படம் மற்றும் அதை பார்க்கும் நபர்களை அனுமதிக்கும் வசதி போன்ற புதிய அம்சங்கள் பயனர்கள் மத்தியில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தற்போது நிரந்தரமாக தங்களது வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை நீக்குவதற்கான வழிமுறைகளை அளித்துள்ளது.

தமிழகத்தில் செப். 13 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதன்படி, ஒரு வாட்ஸ்அப் கணக்கை நீக்குவதற்கு 90 நாட்கள் ஆகும், ஆனால் ஒரு முறை அந்த கணக்கை நீக்கிவிட்டாலும் அதனை மீண்டும் திரும்ப பெற முடியாது. இதனால் பயனர்கள் மிகவும் கவனமாக இந்த செயலை செய்ய வேண்டும். முன்னதாக வாட்ஸ்அப்பிற்கான பேக்அப் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனிற்கு என்று தனியாக செயல்முறைகள் உள்ளது.

ஆண்ட்ராய்டு ஃபோனில் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை நீக்கும் முறை:

உங்கள் வாட்ஸ்அப்-ஐ ஓபன் செய்து கொள்ள வேண்டும்.

More options என்பதில் உள்ள Settings பகுதிக்கு செல்ல வேண்டும்.

Account-ற்குள் சென்று அங்குள்ள DELETE MY ACCOUNT-ஐ தேர்வு செய்ய வேண்டும்.

பின் உங்களுக்கு காண்பிக்கப்படும் பட்டியலில் இருந்து காரணத்தை தேர்வு செய்ய வேண்டும்.

இறுதியாக மீண்டும் DELETE MY ACCOUNT-ஐ கிளிக் செய்ய வேண்டும்.

இப்பொழுது, உங்கள் கணக்கு நிரந்தமாக அழிக்கப்பட்டு விடும்.

Exams Daily Mobile App Download

ஐ ஃபோனில் உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை நீக்கும் முறை:

உங்கள் வாட்ஸ்அப்-ஐ ஓபன் செய்து கொள்ள வேண்டும்.

Settings பகுதியில் உள்ள Account-ற்குள் இருக்கும் DELETE MY ACCOUNT-ஐ தேர்வு செய்ய வேண்டும்.

உங்கள் மொபைல் நம்பரை பதிவிட்டு, DELETE MY ACCOUNT என்பதைதேர்வு செய்ய வேண்டும்.

இப்பொழுது, உங்கள் கணக்கு நிரந்தமாக அழிக்கப்பட்டு விடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!