மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் அகவிலைப்படி (DA) உயர்வு – சம்பளம் ரூ.27,312 வரை அதிகரிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் அகவிலைப்படி (DA) உயர்வு - சம்பளம் ரூ.27,312 வரை அதிகரிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் அகவிலைப்படி (DA) உயர்வு - சம்பளம் ரூ.27,312 வரை அதிகரிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் அகவிலைப்படி (DA) உயர்வு – சம்பளம் ரூ.27,312 வரை அதிகரிப்பு!

சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொகை 34% ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இப்போது ஜூலை மாதத்திலும் DA உயர்வு இருக்கும் என்று தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. இதன் மூலம் ஊழியர்களின் சம்பளம் ரூ.27,312 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அகவிலைப்படி உயர்வு

மார்ச் மாதத்திற்கான AICPI குறியீட்டின் தரவுக்குப் பிறகு, ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களின் DA அதிகரிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இம்முறை மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை 4 சதவீதம் வரை அதிகரிக்கப்படலாம். இதன் அடிப்படையில், ரூ.56,900 ஆக இருந்த அடிப்படை சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு இனி ஆண்டுக்கு ரூ.27,312 வரை சம்பளம் அதிகரிக்கும். இதற்கு முன்னதாக ஜனவரி 2022 தவணைக்கான மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில், ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வை அமல்படுத்துவது குறித்தும் அரசு தகவல் அளித்தது. இப்போது ஏப்ரல் மாத சம்பளத்துடன் சேர்த்து மூன்று மாத நிலுவைத் தொகையும் வழங்குவது குறித்து நிதி அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. இதனை தொடர்ந்து ஜூலையில், மீண்டும் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் அகவிலைப்படி தொகை 4% அதிகரிக்கலாம் என்று மார்ச் மாதத்தில் வந்த அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு (AICPI) கூறுகிறது.

இதற்கு முன்னதாக ஜனவரி மற்றும் பிப்ரவரியில் ஏஐசிபிஐ புள்ளிவிவரங்களில் சரிவு ஏற்பட்டது. இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான DA அதிகரிப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது. ஆனால் மார்ச் எண் வெளியான பிறகு, டிஏ உயர்வு நிலையானதாக கருதப்படுகிறது. இப்போது ஜூலை முதல் ஆகஸ்ட் மாதங்களில் அகவிலைப்படி உயர்வு 4 சதவீதமாக இருந்தால், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயரும். இதில் ஏப்ரல், மே மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை என்றாலும், அதிகரித்து வரும் பணவீக்கத்தைப் பார்க்கும்போது, AICPI எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ரூ.98,000/- ஊதியத்தில் ONGC நிறுவனத்தில் வேலை – 900+ காலிப்பணியிடங்கள்..!

இப்போது ரூ.56,900 அடிப்படைச் சம்பளம் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38% என்ற கணக்கில் ரூ.21,622 வரை சம்பள உயர்வு ஏற்படும். மேலும், 34 சதவீத அகவிலைப்படியின்படி, இந்த ஊழியர்களுக்கு ரூ.19,346 என்ற அடிப்படையில் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதன்படி அவர்களது சம்பளம் ஒவ்வொரு மாதமும் ரூ.2,276 என்ற அடிப்படையில் ஆண்டுக்கு ரூ.27,312 வரை அதிகரிக்கும். தற்போது வரை 18 ஆயிரம் அடிப்படை சம்பளம் உள்ளவர்கள் ரூ.6,120 என ஊதியம் பெறுகின்றனர். இதில் டிஏ 38% ஆக உயர்ந்தால் மொத்த தொகை ரூ.6,840 ஆக உயரும். அதாவது, ஒவ்வொரு மாதமும் சம்பளம் ரூ.720 வரை அதிகரிக்கும். இதன்படி ஆண்டுக்கு ரூ.8,640 உயர்வு இருக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!