புதிய வருமான வரியின் கீழ் வரி விலக்கு பெற வேண்டுமா? மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க!

0
புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் வருமான வரி விலக்கு பெறுவது எப்படி என்பது குறித்த முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வரி விலக்கு:
தனிநபர்கள் மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பங்களுக்கு (HUFs) புதிய வருமான வரி முறையானது கடந்த ஏப்ரல் 1, 2020 அன்று மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. வருமான வரி செலுத்துவோர் இரண்டு வரி முறையில் அவர்களுக்கு ஏற்ற வரி முறையை தேர்வு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்வு செய்யாத நபர்களுக்கு 2023 ல் புதிய வரிமுறைக்கு மாற்றப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. புதிய வரி விதிப்பு முறையை தேர்வு செய்யும் சம்பளதாரர்கள், தனிநபர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் ரூ.50,000 என்ற நிலையான வரி விலக்கையும் தேசிய ஓய்வூதிய முறை (NPS) – பிரிவு 80CCD (2) இன் கீழ் வரி விலக்கு பெற்றுக்கொள்ளமுடியும்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் தொடர்பான போக்குவரத்து கொடுப்பனவுகளுக்கான விலக்கு, டிராவல் அலவன்ஸ், பயணம், சுற்றுப்பயணங்கள் அல்லது இடமாற்றங்கள் தொடர்பான இழப்பீடுகள், பிரிவு 10(10C) இன் கீழ் விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ், பிரிவு 10(10) இன் கீழ் கிராச்சுட்டி தொகைக்கு, பிரிவு 24 ன் கீழ் கடன் வாங்கிய சொத்துகளுக்கான வீட்டுக் கடன்களுக்கு, பிரிவு 10(10AA) இன் கீழ் விடுப்பு பணத்திற்காக பெறப்பட்ட தொகைக்கு பிரிவு 80CCD(2) இன் கீழ் ஊழியர்களின் NPS கணக்குகளுக்கு முதலாளி பங்களிப்புகளுக்கு, பிரிவு 80CCH(2) இன் கீழ் அக்னிவீர் கார்பஸ் ஃபண்ட் டெபாசிட்கள் மீது, பிரிவு 10(10AA) இன் கீழ் விடுப்பு பணத்திற்காக பெறப்பட்ட தொகைக்கு போன்றவற்றிற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!