தமிழக காமன்வெல்த் வீரர்களுக்கு ஊக்கத்தொகை – அரசு அறிவிப்பு!

0
தமிழக காமன்வெல்த் வீரர்களுக்கு ஊக்கத்தொகை - அரசு அறிவிப்பு!
தமிழக காமன்வெல்த் வீரர்களுக்கு ஊக்கத்தொகை - அரசு அறிவிப்பு!
தமிழக காமன்வெல்த் வீரர்களுக்கு ஊக்கத்தொகை – அரசு அறிவிப்பு!

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தமிழகத்தில் இருந்து பங்கேற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்ச்சியில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஊக்கத்தொகை:

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2018ம் ஆண்டுக்கு பிறகு 2022ம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த ஜூலை 29ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு போட்டியில் தடகளம், பேட்மிண்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட் உள்ளிட்ட 19 போட்டிகளும், 8 பாரா விளையாட்டுகளும் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தில் இருந்து மேசைப்பந்து போட்டியில் ஆண்கள் குழு போட்டி, கலப்பு இரட்டையர் போட்டிகளில் பங்கேற்றனர்.

அதனை தொடர்ந்து ஒற்றையர் போட்டிகளில் 3 தங்கம் மற்றும் இரட்டையர் போட்டியில் 1 வெள்ளி என்று மொத்தம் 4 பதக்கங்களை வென்றனர். இதில் மேசைப்பந்து போட்டியில் ஆண்கள் குழுப்போட்டியில் 1 தங்கம், இரட்டையர் போட்டியில் 1 வெள்ளி மற்றும் ஒற்றையர் போட்டியில் 1 வெண்கலம், என மொத்தம் 3 பதக்கங்களை வென்ற ஜி. சத்தியனுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற சவ்ரவ் கோஷலுக்கு ஊக்கத்தொகையாக தமிழக அரசு சார்பாக 40 லட்சம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் Aavin நிறுவனம் சார்பில் புதிதாக 10 பொருள்கள் அறிமுகம் – அமைச்சர் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

அதோடு ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் போட்டிகளில் 1 வெண்கலப் பதக்கம் வென்ற தீபிகா பல்லிக்கலுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 20 லட்சம் ரூபாயும் மற்றும் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்களின் பயிற்றுநர்கள் 5 நபர்களுக்கு மொத்த ஊக்கத்தொகையாக 51 லட்சம் ரூபாய் என மொத்தம் 391 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வர் வழங்கினார். அதனை தொடர்ந்து இந்தியாவின் 75 வது கிராண்ட் மாஸ்டராக பட்டம் வென்றுள்ள செல்வன் பிரணவ் வெங்கடேஷ்-க்கு ஊக்கத்தொகையாக 5 லட்சம் ரூபாய் காசோலையும் வழங்கப்பட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here