தமிழகத்தில் செப்.1 முதல் சுழற்சி முறையில் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் உறுதி!
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே உத்தேசிக்கப்பட்டது. இந்நிலையில் சுழற்சி முறையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் மக்களின் போதிய ஒத்துழைப்பாலும், தடுப்பூசிகள் விளைவாகவும் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருகிறது. இந்த நேரத்தில் மாணவர்களின் கல்வி நிலை கருதி பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 2021 – 2022க்கான புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ளது. இதனால் வரும் செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து உத்தேசிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து பள்ளிகளிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வராததால் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவும் என்ற அச்சம் அனைவரது மத்தியிலும் நிலவி வருகிறது. எனவே பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மாணவர்கள் கூட்டம் கூடாமல் சமூக இடைவெளியை பின்பற்றி உணவருந்த வேண்டும், ஒவ்வொரு வகுப்புகளுக்கும் இடைவேளை நேரத்தை மற்ற வேண்டும். பள்ளி நுழைவு வாயிலில் உடல் வெப்பநிலை கண்காணிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
அண்ணா பல்கலை மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு – புதிய துணைவேந்தர் உறுதி!
அதனை தொடர்ந்து 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்க திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை அறிவிப்பை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிடுவார் என்றும் தெரிவித்துள்ளார். மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டும் மூன்றாம் அலை எச்சரிக்கையை அறிந்தும், பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார். விரைவில் பள்ளிகள் திறப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட உள்ளது.