தமிழகத்தில் இந்து அல்லாதோர் கோவிலில் நுழைய தடையில்லை – நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

0
தமிழகத்தில் இந்து அல்லாதோர் கோவிலில் நுழைய தடையில்லை - நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் இந்து அல்லாதோர் கோவிலில் நுழைய தடையில்லை - நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் இந்து அல்லாதோர் கோவிலில் நுழைய தடையில்லை – நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வருகிற 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி கோவில் கருவறை விமானம், உதய மார்த்தாண்ட மண்டபம் மேற்கூரை அஷ்டபந்தன காவியால் பூசப்பட்டு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கலசங்கள் பொருத்தப்பட உள்ளன. இந்நிலையில் இந்து அல்லாதோர் கோவிலில் நுழைய தடையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றம் முக்கிய உத்தரவு:

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 6-ந் தேதி (நாளை மறுநாள்) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனையொட்டி கும்பாபிஷேக விழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பூஜை நடந்து வருகிறது. மேலும் 2-வது நாள் விழாவில் பாலாலய சன்னதியில் இருந்து சாமி சிலைகள் கருவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டன. 3-வது நாளான ஜூலை 1ம் தேதி காலையில் கணபதி ஹோமம், சாந்தி ஹோமம், அற்புத சாந்தி ஹோமம் ஆகியன நடந்தது. மேலும் கிருஷ்ணன், குலசேகர பெருமாள் சன்னிதிகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

Exams Daily Mobile App Download

மேலும் கும்பாபிஷேக நாளில் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் போதிய இடவசதி குறைவாக இருப்பதால் கும்பாபிஷேகத்தை பக்தர்கள் நேரில் காண கோவிலின் உள் பகுதி மற்றும் வெளிப்புறங்களில் பெரிய அளவிலான எல்.இ.டி. டிவி.க்கள் அமைக்க அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான ஆய்வு பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

CBSE 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியீடு? வாரியம் விளக்கம்!

இந்நிலையில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், கும்பாபிஷேக விழாவில் இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழைய கூடாது என உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது கன்னியாகுமாரி மாவட்டம் சோமன் என்பவர் தொடர்ந்த வழக்கில், ஆதிகேசவ பெருமாள் கோவில், குடமுழுக்கில் இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என உத்தரவிட கூறியிருந்தார். மேலும் மாற்று மதத்தவரான அமைச்சர் மனோ தங்கராஜ் குடமுழுக்கு விழாவில் பங்கேற்க உள்ளார் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்க கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை விதிகள் எதுவும் இல்லை என்றும், நம்பிக்கை கொண்டவர்கள் கோவிலுக்கு செல்லும் போது அவர்களை நிறுத்தி மதத்தை உறுதி செய்வது பிரச்சனைக்கு வழிவகுக்கும் எனவும் கூறினார். மேலும் வேறு மதத்தை சார்ந்த பாடகர் ஜேசுதாஸின் பாடல்கள் கோவில்களில் ஒலிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டினர். மேலும் வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு, நாகூர் தர்காவிற்கு ஏராளமான இந்துக்கள் சென்று வழிபட்டு வருவதாக கூறிய நீதிபதிகள், இவ்விவகாரத்தை குறுகிய பார்வையில் அணுக விரும்பவில்லை என்று கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here