அனைத்து ஆதார் அட்டைதாரர்களுக்கு முக்கிய அப்டேட் – ஆன்லைனில் புதுப்பிக்க எளிய வழிமுறைகள்!

0
அனைத்து ஆதார் அட்டைதாரர்களுக்கு முக்கிய அப்டேட் - ஆன்லைனில் புதுப்பிக்க எளிய வழிமுறைகள்!
அனைத்து ஆதார் அட்டைதாரர்களுக்கு முக்கிய அப்டேட் - ஆன்லைனில் புதுப்பிக்க எளிய வழிமுறைகள்!
அனைத்து ஆதார் அட்டைதாரர்களுக்கு முக்கிய அப்டேட் – ஆன்லைனில் புதுப்பிக்க எளிய வழிமுறைகள்!

ஆதார் அட்டை, இந்திய குடிமகன் ஒவ்வொருக்கும் இருக்க வேண்டிய பிரதானமான ஆவணமாக உள்ளது. உதாரணமாக, வங்கிக் கணக்கு, வேலைகளுக்கு பதிவு செய்தல், தேர்வு விண்ணப்பம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், ஆதார் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கிய ஆவணமாக அனைத்து இடங்களிலும் கேட்கப்படும். ஆதாரில் ஏதேனும் தவறு இருந்தால், அதை ஆன்லைனில் திருத்திக் கொள்ளலாம். இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

எளிய வழிமுறைகள்:

இந்தியாவில் ஆதார் அட்டை பெரும்பாலான இடங்களில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய ஆவணமாக உள்ளது. ஆதார் அட்டை, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்பட்ட 12 இலக்க தனிப்பட்ட ஐடி ஆகும். கடந்த சில ஆண்டுகளில் ஆதார் அட்டையின் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்துள்ளது. இந்த அட்டை மூலம் பல அரசின் திட்டங்களைப் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். குழந்தையின் பள்ளி சேர்க்கை முதல் கல்லூரி சேர்க்கை வரை, பயணத்தின் போது அடையாளச் சான்றாக, வங்கிக் கணக்கு தொடங்க என ஆதார் அட்டை அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போடும்போது இது தேவைப்படுகிறது.

Exams Daily Mobile App Download

அதனுடன், சொத்து வாங்கும் போதும், நகை வாங்கும் போதும் ஆதார் அட்டை அவசியமான ஒரு ஆவணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் ஏதேனும் தவறு ஏற்பட்டால்,அது எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே அதை உடனடியாக புதுப்பிக்க வேண்டியது அவசியமாகும். நமது நாட்டு மக்கள் தொகையில், ஆங்கில மொழி தெரியாமல், தங்கள் உள்ளூர் மொழி, அதாவது தாய் மொழி மட்டுமே தெரிந்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதால், அப்படிப்பட்டவர்களின் வசதிக்காக, உள்ளூர் மொழியிலும் ஆதார் அட்டையை புதுப்பிக்கும் வசதியை யுஐடிஏஐ வழங்கியுள்ளது.

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை உத்தரவு!

1.முதலில் ஆதார் அட்டை வழங்கும் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான UIDAI https://uidai.gov.in/ஐ கிளிக் செய்ய வேண்டும்.

2. இந்த இணையதளத்தில் கிளிக் செய்தவுடன், ஆதார் சேவை பிரிவு அப்டேட் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

3. இங்கே உங்கள் ஆதாரின் 12 இலக்க தனிப்பட்ட எண் கேட்கப்படும். அதை நிரப்பவும்.

4. அடுத்து நீங்கள் கேப்ட்சா குறியீட்டை நிரப்ப வேண்டும். அடுத்து உங்களிடம் சில விவரங்கள் கேட்கப்படும். உடனடியாக அவற்றை நிரப்பவும்.

5. அதன் பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும், அதை நிரப்ப வேண்டும்.

6. இங்கு தொடரவும் பட்டனில் டேப் செய்ய வேண்டும். இதற்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் அத்துடன் எந்த தகவலையும் புதுப்பிக்கலாம். இதற்கு உங்கள் மொபைல் எண் மற்றும் ஆதார் எண் மட்டுமே தேவைப்படும். அருகில் உள்ள யுஐடிஏஐ மையத்திற்குச் சென்று ஆதாரை புதுப்பிக்கலாம் என்பது குறிப்பித்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!