இந்தியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு – யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

0
இந்தியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு - யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு - யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இந்தியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு – யுஜிசி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிறகு வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. அதனால் வெளிநாட்டு மாணவர்களுக்கான சேர்க்கையை எளிமையாக்கும் வகையில் யுஜிசி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள்

இந்தியாவில் கொரோனா பரவலுக்கு பிறகு ஒவ்வொரு துறையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பாக இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை கொரோனா பரவலுக்கு பிறகு கணிசமாக குறைந்துள்ளது. ஏனெனில் நாட்டில் கொரோனா கால கட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதில் குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து கொரோனா பரவாமல் இருக்க சர்வதேச விமானங்கள் தடை செய்யப்பட்டது. அத்துடன் வெளிநாட்டினர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.

அதனால் தற்போது இந்தியாவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டில் 75 ஆயிரமாக இருந்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 2021ம் ஆண்டில் 24,439 பேர் என சரிந்துவிட்டது. இதனால் தற்போது இந்திய உயர் கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் பொருட்டு யுஜிசி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கையை எளிதாக்க பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.

SSC JE தேர்வுக்கு விண்ணப்பித்தவரா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு!

அதாவது இந்தியா முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு இளநிலை, முதுநிலை படிப்புகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு உருவாக்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் உயர்கல்வியை உலகமயமாக்க தேசியகல்விக்கொள்கை 2020ம் வலியுறுத்துகிறது. இதனை அடிப்படையில் இந்த வழிகாட்டுதல் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது தொடர்பாக பொது மக்களும் கருத்து தெரிவிக்கலாம் என்றும் யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!