WhatsApp பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு – Hacking முறையை தடுக்க புதிய அப்டேட்!

0
WhatsApp பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு - Hacking முறையை தடுக்க புதிய அப்டேட்!
WhatsApp பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு - Hacking முறையை தடுக்க புதிய அப்டேட்!
WhatsApp பயனர்களுக்கான முக்கிய அறிவிப்பு – Hacking முறையை தடுக்க புதிய அப்டேட்!

WhatsApp செயலியில் இருக்கும் செய்தியை ஒருவரின் அனுமதி இல்லாமலேயே திருடப்படுவதால் Hacking முறையை தடுக்க கூடிய விரைவில் புதிய அப்டேட் வர இருக்கிறது. அதற்கான வேலைப்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

WhatsApp அப்டேட்:

Beta நிறுவனத்திற்கு சொந்தமான WhatsApp நிறுவனம் அவ்வப்போது பயனாளர்களின் வசதிக்காக பல புதிய அப்டேட்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது. மேலும், கடந்த சில வாரங்களாகவே வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து அப்டேட்களை வழங்கியபடியே தான் இருந்து வருகிறது. அதாவது, வாட்ஸ்ஆப் குரூப்பில் இருந்து ஒருவர் வெளியேறினால் அந்த பயனாளர் Left என காண்பிக்காத வகையில் புதிய அப்டேட்டை வழங்கியிருக்கிறது. அதே போல Past Participants என்கிற பகுதிக்குள் சென்று வாட்ஸ்ஆப் குரூப்பில் இருந்து வெளியேறிய நபரின் விவரங்களை 60 நாட்களுக்குள் பார்த்துக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை: எதிர்பாரா ஏற்றம் கண்ட ஆபரண தங்கத்தின் விலை – சவரனுக்கு ரூ.40 அதிகரிப்பு!

மேலும், Delete For everyone செய்வதிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது, Delete For everyone செய்வதில் கால அவகாசத்தை 8 நிமிடங்களில் இருந்து இரண்டு நாட்கள் வரைக்கும் செய்துகொள்ளும்படியான வசதியையும் வாட்ஸ்ஆப் வழங்கியிருக்கிறது. அதே போல, வாய்ஸ் மெசேஜ், வீடியோ கால் என அனைத்திலும் பல அப்டேட்கள் கிடைத்துள்ளன. மேலும், வாட்ஸ்ஆப் குரூப்பில் இருக்கும் தேவையற்ற செய்திகளையும் குரூப் அட்மின் நீக்கி கொள்ளலாம். எந்த அளவுக்கு வாட்ஸ்ஆப் செயலியில் அப்டேட் வருகிறதோ அந்த அளவுக்கு வாட்ஸ்ஆப் அக்கௌன்ட் திருடப்பட்டு வருகிறது.

அதாவது, உங்களது வாட்ஸ்ஆப் செயலிக்குள் வேறொருவர் நுழைய முயற்சித்தால் உங்களது மொபைலுக்கு அலர்ட் அனுப்பப்படும் எனவும், அதில் Allow அல்லது Deny என்பதை நீங்கள் முடிவு செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வாட்ஸ்ஆப் செய்திகள் பல திருடப்படுவதால் WhatsApp’s two-step verification முறையில் சில முறைகளை புகுத்த whatsapp திட்டமிட்டுள்ளது. இந்த அப்டேட் கூடிய விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!