SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கடன் விகிதம் அதிகரிப்பு!

0
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு - கடன் விகிதம் அதிகரிப்பு!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு - கடன் விகிதம் அதிகரிப்பு!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு – கடன் விகிதம் அதிகரிப்பு!

பாரத ஸ்டேட் வங்கி தற்போது குறைந்த செலவு அடிப்படையிலான கடன் விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் வரைக்கும் உயர்த்தியுள்ளது. மேலும், இந்த புதிய அறிமுகம் இன்று முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SBI வங்கி:

நாட்டின் மிகப்பெரிய வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி அவ்வப்போது பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதம் மற்றும் கடன் விகிதத்தை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதே போல தற்போதும் குறைந்த செலவு அடிப்படையிலான கடன் விகிதத்தை 10 அடிப்படை புள்ளிகள் வரைக்கும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. அதாவது, MCLR 0.10 சதவீதம் வரைக்கும் அதிகரிக்கவுள்ளது. இந்த புதிய கடன் விகித திட்டம் இன்று முதல் அமலுக்கு வரவுள்ளதாகவும் SBI வங்கி அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது, பாரத ஸ்டேட் வங்கி MCLR ன் கடன் விகிதத்தை ஒரு வருட காலத்திற்கு 7.40 சதவீதத்தில் இருந்து 7.50 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மேலும், ஆறு மாத காலத்திற்கு MCLR கடன் விகிதம் 7.35 சதவீதத்தில் இருந்து 7.45 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, இரண்டு வருடத்திற்கான MCLR 7.60 சதவீதத்தில் இருந்து 7.70 சதவீதமாகவும், மூன்று வருட காலத்திற்கு MCLR 7.7 சதவீதத்தில் இருந்து 7.8 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது. மேலும், MCLR கடன் விகிதம் அதிகரிக்கும்போது வீடு, கார் மற்றும் தனிநபருக்கான சில்லறைக் கடன்களும் அதிகரிக்கக்கூடும்.

நீலகிரி மாவட்டத்தில் பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – ரெட் அலர்ட் எச்சரிக்கை!

மேலும், மாதாந்திர தவணைகளும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, SBI வங்கியின் வீட்டுக் கடன் விகிதம் CIBIL மதிப்பை பொறுத்து 7.05 சதவீதம் முதல் 7.55 சதவீதம் வரைக்கும் மாறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனக் கடன் விகிதம் 7.45 சதவீதம் முதல் 8.15 சதவீதம் வரைக்கும் மாறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. SBI வங்கியை போலவே பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் MCLR கடன் விகிதமும் 10 முதல் 15 அடிப்படைப் புள்ளிகள் வரைக்கும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டம் ஜூலை 12 முதல் அமலுக்கு வந்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!