ஜியோ (Jio) சிம் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ரீசார்ஜ் செய்வதற்கு புதிய வழி!!

0
ஜியோ (Jio) சிம் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ரீசார்ஜ் செய்வதற்கு புதிய வழி!!
ஜியோ (Jio) சிம் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ரீசார்ஜ் செய்வதற்கு புதிய வழி!!
ஜியோ (Jio) சிம் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ரீசார்ஜ் செய்வதற்கு புதிய வழி!!

ஜியோ நிறுவனம் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு ரீசார்ஜ் செய்வதற்கு புதிய வழிவகை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டம் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

ஜியோ:

தொலைத்தொடர்பு நிறுவனங்களில் மக்கள் மத்தியில் மிக பிரபலமாக இருந்து வருகிறது ஜியோ நிறுவனம். இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயனடையும் வகையில் பல திட்டங்களை அறிவித்து வருகிறது. இதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் தொடர்ந்து உற்சாகமடைந்து வருகின்றனர். தற்போது அந்த வகையில் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் சேவையை மேற்கொள்ள புதிய வழிவகை ஒன்றை அறிவித்துள்ளது. தற்போது அதற்கான முழு விவரம் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ் விஜயன் நியமனம் – தலைமை செயலாளர் அறிவிப்பு!!

அதன்படி ஜியோ நிறுவனம் வாட்ஸ் ஆப் சாட்பாட் ஜியோ கேர் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் திட்டம் குறித்த முழு விவரங்களையும் எளிதாக அறிய முடியும். அதன்படி வாடிக்கையாளர்கள் ஜியோ நிறுவனத்தின் ஜியோகேர் 7000770007 என்ற எண்ணிற்கு Hii என்றும் மெசேஜ் அனுப்ப வேண்டும். பின்பு ஜியோ சிம் ரீசார்ஜ் திட்டத்தை கண்டறிய அதில் வரும் பிரதான மெனு விருப்பத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

அதில் ரீசார்ஜ் விருப்பம் தேர்ந்தெடுக்கப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு தேவையான திட்டம் அனைத்தும் காண்பிக்கப்படும். அதில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தும் சேவையை தொடங்க வேண்டும். கட்டணம் செலுத்துவதற்கு GPay, Phonepay, Paytm போன்ற செயலி மூலம் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் ரீசார்ஜ் மட்டுமின்றி புதிய சிம் அல்லது சிம் போர்டபிளிட்டி விண்ணப்பம் போன்ற சேவைகளும் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!