கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – Indane நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

0

கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு – Indane நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

இந்தியாவில் கொரோனா கால கட்டத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்க தொடங்கியது. இதனை தொடர்ந்து சமையல் செய்ய தேவைப்படும் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாக எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்தது. தற்போது குறைந்த விலையில் Indane நிறுவனம் எரிவாயு சிலிண்டர் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

சிலிண்டர் விலை குறைவு

இந்தியாவில் கொரோனா காலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் நாட்டில் நிதி நெருக்கடி நிலை அதிகரித்தது. அத்துடன் பணவீக்கமும் அதிகரிக்க தொடங்கியதன் விளைவாக அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்க தொடங்கியது. மேலும் ஒவ்வொரு வீட்டிலும் சமையலுக்கு உபயோகப்படுத்தப்படும் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரிக்க தொடங்கியது. சிலிண்டரின் விலை மாதந்தோறும் புதிய உச்சத்தை தொட்டது. அதனால் சாதாரண மக்களால் எரிவாயு சிலிண்டரை வாங்க மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

12 ஆம் வகுப்பு முடித்தவரா ? ரூ.18,000 /- சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!

தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் சிலிண்டர் விலை குறைந்துள்ளது. சென்னையில் தற்போது ஒரு சாதாரண சிலிண்டர் விலை 965.50 ரூபாயாக உள்ளது. இந்நிலையில் சுமார் 300 ரூபாய் குறைந்த விலையில் சிலிண்டர் வாங்கும் வகையில் ஒரு புதிய வகை சிலிண்டரை Indane நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வகை சிலிண்டர் “காம்போஸிட் சிலிண்டர்” என அழைக்கப்படுகிறது. இதில் குறைந்த அளவு எரிவாயு மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. அதாவது 10 கிலோ எரிவாயு மட்டுமே இதில் நிரப்பப்படும்.

இந்த சிலிண்டர் சாதாரண சிலிண்டரை விட 50% குறைவாக உள்ளது. அதனால் இதனை சுலபமாக தூக்க முடியும். மேலும் காம்போஸிட் சிலிண்டரில் கேஸ் மீதமிருக்கிறது என்பதை முன்கூட்டியே பார்த்து தெரிந்துகொள்ளலாம். மற்ற சிலிண்டரில் இதனை பார்க்க முடியாது. ஆனால், காம்போஸிட் சிலிண்டரில் எவ்வளவு கேஸ் இருக்கிறது என்பதை பார்க்க முடியும் என்பதால் இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அத்துடன் இதன் விலை ரூ.634 மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனால் சாதாரண மக்கள் கூட இந்த வகை சிலிண்டரை வாங்க முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!