அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – ஆதார் கார்டுடன் இணைப்பது எப்படி?

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு - ஆதார் கார்டுடன் இணைப்பது எப்படி?
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு - ஆதார் கார்டுடன் இணைப்பது எப்படி?
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – ஆதார் கார்டுடன் இணைப்பது எப்படி?

நாடு முழுவதும் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவரும் ரேஷன் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி ரேஷன் கார்டை ஆதார் அட்டையுடன் இணைப்பது குறித்த முழு விபரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

ரேஷன் கார்டை ஆதாருடன் இணைத்தல்:

நாடு முழுவதும் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்பட்டிருப்பது போல் இந்திய குடிமகன் ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய இரண்டு ஆவணங்களும் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கியமான ஒரு ஆவணமாக கருதப்படுகிறது. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள ஆதார் கார்டில் வழங்கப்பட்டிருக்கும் 12 இலக்க எண்ணை அனைத்து விதமான கணக்குகளில் இணைக்குமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது.

தமிழகத்தில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

அந்த வகையில் தற்போது ஒரே நாடு ஒரே கார்டு என்ற திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதனால் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்க அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த செயலை ஆன்லைன் மூலம் மேற்கொள்ள உரிய வசதிகளை வழங்கியுள்ளது. இந்நிலையில் ரேஷன் அட்டையை ஆதாருடன் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் இணைப்பது குறித்த முழு விபரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

ஆன்லைனில் ஆதார் அட்டையை இணைப்பது எப்படி?

1. முதலில் ஆதாரின் அதிகாரபூர்வ இணையதளமான https://uidai.gov.in/ செல்ல வேண்டும்.

2. அதில் start now என்பதை க்ளிக் செய்யவும். உங்களது முகவரி மற்றும் போன் நம்பரை கொடுத்து ரேஷன் கார்டு பெனிஃபிட் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

3. பின்னர் உங்களது ஆதார் எண், இ மெயில் ஐடி போன்ற விவரங்களை கொடுக்க வேண்டும். உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி வரும் அதனை கொடுத்து சப்மிட் கொடுத்தால் ரேஷன் மற்றும் ஆதாரின் இணைப்பு விரைவில் ஆகிவிடும்.

தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் 500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தேவையான ஆவணங்கள்:

1. ஆதார் அட்டை நகல்

2. ரேஷன் கார்டு நகல்

3. ரேஷன் கார்டு தாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

ஒரு வேளை உங்களது ரேஷன் கார்டில் பதிவு செய்த மொபைல் எண் இல்லையெனில், ஆஃப் லைனில் சென்றும் அப்டேட் செய்து கொள்ளலாம். அவ்வாறு செய்வதற்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உள்ளிட்ட விவரங்கள் கொடுத்து அப்டேட் செய்து கொள்ளலாம். இதனை ஆதார் மையத்தில் சென்று, பயோமெட்ரிக் முறையில் அப்டேட் செய்து கொள்ளலாம்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!