ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – அரசின் அதிரடி நடவடிக்கை!

0
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - அரசின் அதிரடி நடவடிக்கை!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - அரசின் அதிரடி நடவடிக்கை!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – அரசின் அதிரடி நடவடிக்கை!

இந்தியாவில் ஆதார் கார்டு மூலம் பல விதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதனால் மத்திய அரசு எவ்வாறு மோசடி நடைபெறாமல் இருப்பதற்காக தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த ஒரு தொகுப்பை கீழே பார்ப்போம்.

ஆதார் கார்டு மோசடி:

இந்தியாவில் தற்போது ஆதார் கார்டு மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக மாறி விட்டது. மேலும் நமது நாட்டை பொறுத்த வரையில் இன்றைக்கு இன்றியமையாத ஆவணங்களில் ஒன்றான ஆதார் கார்டு என்பது தற்போது மிகவும் முக்கிய ஆவணமாக மாற்றப்பட்டு விட்டது. மேலும் ஒரு புதிய பேங்க் அக்கவுண்ட் ஓபன் செய்ய, புதிய சிம் கார்டை வாங்குதவற்கும் அல்லது கோவிட்-19 தடுப்பூசி மற்றும் பரிசோதனைகளை செய்ய என நாட்டு மக்கள் தங்கள் ஆதார் அட்டைகளை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பதற்கு, புதிதாக பிறந்த குழந்தையின் பெயரை சேர்க்கவும் ஆதார் கார்டு வைத்து மட்டுமே செய்ய முடியும் என்ற நிலைக்கு வந்து விட்டனர்.

ExamsDaily Mobile App Download

இந்த நிலையில் தற்போது ஆதார் கார்டை வைத்து வங்கிக் கடன் கூட வாங்கலாம் என்றும் தெரிவித்து உள்ளனர். அதனால் மோசடி ஆசாமிகள் பலர் இந்த திட்டத்தை பயன்படுத்தி பலரது ஆதார் கார்டுகளை மோசடி செய்து வருகின்றனர். இவ்வாறு மோசடி செய்பவர்களை பிடிப்பதற்காக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) அதிகாரப்பூர்வ தளத்தில் நீங்கள் ஆன்லைன் மூலமாக சரி பார்க்கலாம். அதற்கு எந்த கட்டணமும் இல்லை என்றும் தெரிவித்து உள்ளனர்.

SSC வெளியிட்ட புதிய வேலைவாய்ப்பு – 7600+ காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!

அதற்கான விதிமுறைகள், uidai.gov.in வெப்சைட்டில் சென்று aadhaar services பிரிவில் ’Aadhaar Authentication History’ என்பதை கிளிக் செய்யவும். அதனை தொடர்ந்து ஆதார் நம்பர் மற்றும் பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிட்டு Send OTP என்பதைக் கிளிக் செய்யவும். பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு OTP வரும். அதைப் பதிவிட்டு சமர்ப்பிக்கவும். அதன் பிறகு ஆதார் தொடர்பான தகவல்களை நிரப்ப வேண்டும். கடைசியாக Verify OTP என்பதைக் கிளிக் செய்தவுடன் முழுமையான தகவல்கள் அடங்கிய பட்டியலை நீங்கள் பார்க்கலாம். இதன் மூலம், கடந்த 6 மாதங்களில் உங்கள் ஆதார் அட்டை எங்காவது பயன்படுத்த பட்டு இருந்தால் அதன் தகவல்களை பெற்று கொள்ளலாம். மேலும் அதன் மூலம் ஏதேனும் முறைகேடு நடந்திருப்பதாக தெரிந்தால், 1947 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!