தமிழக பொதுமக்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு!
இந்தியாவில் 75வது சுதந்திர தின விழா வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தின விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளது.
சுதந்திர தின விழா கொண்டாட்டம்
இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர தின விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதையடுத்து சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாட தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அத்துடன் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய குடிமக்கள் அனைவரும் வருகிற ஆகஸ்ட் வேண்டும் என்று பாரத பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன் புறத்திலோ அல்லது மொட்டை மாடியிலோ தேசிய கொடியை ஏற்றவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
பொது மக்கள் அனைவருக்கும் தேசிய கொடி கிடைக்கும் வகையில் நாட்டிலுள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் தேசிய கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த தேசிய கொடியை www.indiapost.gov என்ற இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் முறையிலும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் இந்த நடைமுறையை அனைத்து மாணவர்களுக்கும் தெரியப்படுத்தும் விதமாக அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – Message யை டெலீட் செய்வதில் புதிய வசதி!
இந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியை வருகிற 13,14,15 ஆகிய 3 நாட்களில் தங்களின் வீடுகளில் பறக்கவிட்டு தேசப்பற்றை பறை சாற்ற வேண்டும். இதனை அனைத்து மாணவர்களும் தெரியப்படுத்த வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.