WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – Message யை டெலீட் செய்வதில் புதிய வசதி!

0
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு - Message யை டெலீட் செய்வதில் புதிய வசதி!
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு - Message யை டெலீட் செய்வதில் புதிய வசதி!
WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – Message யை டெலீட் செய்வதில் புதிய வசதி!

வாட்ஸ்அப் செயலி அதிக பயனர்களால் பயன்படுத்த படுகிறது. மேலும் வாட்ஸ் ஆப் ஒரு நம்பிக்கையான தகவல் தொடர்பு வலைத்தளமாக உள்ளது. ஏராளமான யூஸர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப், அவ்வப்போது புதுப்புது மாற்றங்களுடன் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மீண்டும் புதிய அப்டேட் குறித்த அறிக்கை வெளியாகி உள்ளது.

புதிய அப்டேட்:

‘வாட்ஸ்அப்’ பல்வேறு வகையிலும் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அதாவது சாட்டிங், வீடியோ கால், வாய்ஸ் கால், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களை பகிர்ந்து கொள்வது போன்ற பல்வேறு தகவல் பரிமாற்றத்திற்கான முக்கிய செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. மேலும் உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்தி வரும் நிலையில், அடுத்தடுத்து அப்டேட்கள் மூலம் தன்னுடைய சேவையை வாட்ஸ்அப் மேம்படுத்தி வருகிறது. இதனால் பயனர்கள் ‘வாட்ஸ்அப்’ செயலியை எளிமையாக கையாளுகின்றனர். அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் கூட வாட்ஸ்அப் காலில் 30 பேர் வரை இணைத்து பேசக்கூடிய வசதி, குழு அட்மின்களுக்கு குழுவில் பகிரப்படும் எந்த ஒரு செய்தியையும் நீக்கும் சிறப்பு அதிகாரம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டன.

TN Job “FB  Group” Join Now

இதை தொடர்ந்து வாட்ஸ்அப் குழுவில் உள்ள அட்மின்கள் இனி தங்களது குழுவில் 512 உறுப்பினர்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு முன்னதாக 256 உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளது. மேலும் இது நாள் வரையிலாக ‘டெலிட் மெசேஜஸ் ஃபார் எவ்ரிஒன்’ என்கிற அம்சம் தனிப்பட்ட நபர்களுக்கான ஒரு அம்சமாகவே வாட்ஸ்அப்பில் அணுக கிடைக்கிறது. இந்த ஆப்ஷனில், ஒரு நபர் ‘கிரிஞ்ச்’ தனமான மெசேஜ்களை அனுப்பி விட்டால், அதை மற்றவர்கள் பார்ப்பதற்கு ஒரு மணி நேரத்திற்குள் டெலிட் செய்து விடலாம். ஆனால் தற்போது அந்த அம்சத்தில் அப்டேட் வந்துள்ளது.

தமிழக பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – மண்டல ஆய்வு பணி! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

அதாவது வாட்ஸ்அப் பயனர்கள், டெலிட் நினைக்கும் மெசேஜ்களை இரண்டு நாட்களுக்குப் பிறகும் கூட நீக்கலாம் என வாட்சப் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. இப்போதே புதிய அம்சத்தைப் பயன்படுத்தத் தொடங்க, நீங்கள் செய்திகளை அனுப்பிய WhatsApp குழு அல்லது தனிப்பட்ட அரட்டையைத் திறக்கவும். நீங்கள் நீக்க விரும்பும் உள்ளடக்கத்தைத் தட்டிப் பிடிக்கவும், “நீக்கு” என்பதைக் கிளிக் செய்யவும், பின்னர் “அனைவருக்கும் நீக்கு” அல்லது “எனக்காக நீக்கு” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இருப்பினும், நீங்கள் நீக்குவதில் ஈடுபடுவதற்கு முன், ஒரு (சிறிதளவு) கேட்ச் உள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்: இது உண்மையில் வேலை செய்ய அனைத்து பயனர்களும் சமீபத்திய WhatsApp பதிப்பிற்கு புதுப்பிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!