தமிழகத்தில் அனைத்து மண்டல இணை ஆணையர்களின் கவனத்திற்கு – அறநிலையத்துறை ஆணையர்!

0
தமிழகத்தில் அனைத்து மண்டல இணை ஆணையர்களின் கவனத்திற்கு - அறநிலையத்துறை ஆணையர்!
தமிழகத்தில் அனைத்து மண்டல இணை ஆணையர்களின் கவனத்திற்கு - அறநிலையத்துறை ஆணையர்!
தமிழகத்தில் அனைத்து மண்டல இணை ஆணையர்களின் கவனத்திற்கு – அறநிலையத்துறை ஆணையர்!

தமிழக அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டவை குறித்த விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

சுற்றறிக்கை வெளியீடு:

தமிழக அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, புதிய பணியிடங்கள் கோரும் போது அதற்கான காரணங்கள் குறிப்பிட வேண்டும் எனவும், இதற்கு இணை ஆணையர் மனிதவள தணிக்கை மேற்கொண்டு அதற்கான காரணங்களுடன் பரிந்துரை செய்யப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆயுள் தண்டனை கைதிகள் 700 பேர் அண்ணா பிறந்தநாளில் விடுதலை – முதல்வர் அறிவிப்பு!

பணியிடங்களை ஒப்படைப்பு செய்யப்படும் இடங்களில் பழைய பணியிடங்களுக்கு பதிலாக புதிய பணியிடங்கள் கோரப்படும்போது, என்ன காரணங்களால் ஒப்படைப்பு செய்யப்படுகிறது என்பதையும் அது சரிதானா என இணை ஆணையர் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அவரவர் கோவில்களில் உள்ள அனைத்து பணியிடங்களும் ஆணையர் அங்கீகாரத்திற்கு விடுபடாமல் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து அறிக்கை அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள செலவினம் 40 சதவீதத்துக்குள் அடக்கப்பட வேண்டும். 40 சதவீதத்துக்கு மேல் சம்பள செலவினம் ஏற்படுவதை தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தொகுப்பூதியத்தில் அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் என கணக்கீடு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது ஆனால் வருமானம் உயரும் பட்சத்தில் தொகுப்பூதியத்தில் கணக்கிடப்பட்ட நபருக்கு சம்பளம் நிர்ணயம் செய்து அளிக்கப்பட வேண்டும்.

ஆணையருக்கு அனுப்பி வைக்கப்படும் முன்மொழிவுகள் அனைத்தும் சம்பள விகிதாச்சார பட்டியலில் சம்பந்தப்பட்ட மண்டல தணிக்கை அலுவலர் / உதவி தணிக்கை அலுவலர் சான்று பெற்று அனுப்பி வைக்கப்படுவது கட்டாயம். அதற்கு முன் முன்மொழிவுகளில் தக்கார் தீர்மானம் பெற்று இணைக்கப்பட வேண்டும்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மாற்றம்? BCCI விளக்கம்!

பட்டியலில் சேர்ந்த / சேராத அனைத்து கோயில்களுக்கும் பணியிடப் பட்டியல் மற்றும் சம்பள ஏற்ற முறை ஆணையரால் அங்கீகரிக்கப்பட வேண்டும் என உள்ளதால் காலம் தாழ்த்தாது அனைத்து சார்நிலை அலுவலர்கள் விரைவாக அறிக்கையினை அனுப்ப வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!