நாளை தேர்தலில் வாக்களிக்க என்னென்ன கொண்டு செல்ல வேண்டும்? – முழு விவரம்!

0
நாளை தேர்தலில் வாக்களிக்க என்னென்ன கொண்டு செல்ல வேண்டும்? - முழு விவரம்!

நாடாளுமன்றத்தின் 18 வது மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை தமிழகத்தில் தொடங்க உள்ளது.

ஆவணங்கள்:

தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் குறித்து பலருக்கும் குழப்பங்கள் உள்ளது. எனவே வாக்குப்பதிவு செய்யவிருக்கும் நபர்கள் கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் குறித்தான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதலில் ஒரு நபர் வாக்களிக்க வேண்டுமானால் அவர் வாக்காளராக பதிவு செய்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்று இருக்கும் பட்சத்தில் அவரது வாக்குச்சாவடி குறித்த விவரங்கள் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கும்.

TNPSC தேர்வுக்கு படிக்கிறீங்களா? இதை மிஸ் பண்ணாதீங்க – உடனே பாருங்க!

வாக்களிப்பதற்கு வாக்காளர் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் ஆதார் அடையாள அட்டை, பான் கார்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கி கணக்கு புத்தகம், தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கி உள்ள உடல்நல காப்பீட்டு அட்டை, ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை, மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத அட்டை, மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை வாக்களிக்க எடுத்துச் செல்ல வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!