முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 21

0

முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 21

உலக அமைதி தினம்

  • உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளிடையே போர் ஏற்படுவதை முற்றிலும் தடுக்கும் விதத்திலும் ஐ.நா., சார்பில் செப்டம்பர் 21ம் தேதி, உலக அமைதி தினம் (International Day of Peace)கடைபிடிக்கப்படுகிறது.
  • இந்நாள் முன்னர் 1981இல் இருந்து ஓவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் வரும் மூன்றாம் செவ்வாய்க்கிழமையிலேயே கொண்டாடப்பட்டு வந்தது. ஆனாலும் 2002 இல் இருந்து ஆண்டுதோறும் செப்டம்பர் 21 இல் கொண்டாடப்படுகிறது.
  • உலக மக்களை இனம், பால், மொழி, அல்லது சமய பேதமின்றி ஐ.நா சாசனத்தின் உறுதி செய்யப்படுகின்ற நீதிக்கும் சட்ட ஆட்சிக்கும் மனித உரிமைகளுக்கும், அடிப்படை சுதந்திரங்களுக்கும், உலகளாவிய நன்மதிப்பினை வளர்ப்பதற்கென கல்வி, அறிவியல், பண்பாடு மூலமாக நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தி சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் பாடுபடுவதே இந்த அமைப்பின் நோக்கமாகும்.
  • அனைத்து நாடுகளும் தங்களுக்கிடையே உள்ள பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும்.

உலக அல்சைமர் தினம்

  • அல்சைமர் நோயையும் அதனோடு தொடர்புடைய முதுமை மறதியையும் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்க ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ம் நாள் உலக அல்சைமர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
  • தற்போது பெரும்பாலானோர் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். நினைவாற்றலையும், பகுத்தறிவு ஆற்றலையும் இழந்து போவார்கள். மேலும் குழந்தைகளிடையேயும் இந்நோய் சாதாரணமாகக் காணப்படுகிறது.
  • அல்சைமர் (Alzheimer) முதுமையில் வரும் ‘டிமென்ஷியா’ என்கிற ஞாபகமறதி நோயின் ஒரு வடிவம். டிமென்ஷியா பாதிப்பு உள்ளவர்களில் 60 முதல் 70 சதவிகிதம் பேர் அல்சைமர் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!