முக்கியமான நிகழ்வுகள் மே-27

0

முக்கியமான நிகழ்வுகள் மே-27

ஜவஹர்லால் நேரு நினைவு நாள்

பிறப்பு:

  • நவம்பர் 14,1889ல் உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்தார்.
By Royroydeb (AFP) [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • இந்தியாவின் முதல் பிரதமர்(தலைமை அமைச்சர்).
  • இவர் பண்டிட் நேரு, பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார்.
  • உருதுவில் ஜவஹர்_இ லால் என்றால் “சிகப்பு நகை” என்று பொருள், இச்சொல்லிலிருந்து “ஜவஹர்லால்” என்ற பெயர் உருவானது.
  • இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
  • இந்தியா, 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார்.1964, மே 27 ல் காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார்.
  • இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு காங்கிரசு கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு 1952ல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார்.
  • அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர்.
  • ஜவகர்லால் நேருவுக்கு இந்தி மொழி, சமற்கிருதம் மற்றும் இந்தியக் கலைகள் கற்றுக்கொடுக்கப்பட்டன.
  • ஆகஸ்ட் 15, 1947 புது டெல்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனி சிறப்பு நேருவுக்கு கொடுக்கப்பட்டது. இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக, 15 ஆகஸ்ட் பதவி ஏற்று அவர் தொடக்க உரையாக “விதியுடன் ஒரு போராட்டம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
  • இந்தியாவின் திட்டக் குழுவை உருவாக்கி முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை 1951ல் வரைந்தார்.அது அரசாங்கத்தின் தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் விவசாயத்தை வரையறுத்தது.
  • முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை காந்தியின் வழிகாட்டலில் 1929ல் லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார்.

சிறை வாழ்க்கை:

  • 1920ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921ல் நேரு முதல் முறையாகச் சிறைக்கு சென்றார்.
  • 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார்.
  • அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும் அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது.
  • சிறையில் இருந்த நாட்களில் நேரு உலக வரலாற்றின் காட்சிகள் (1934), சுயசரிதை (1936) மற்றும் இந்தியாவின் கண்டுபிடிப்பு ஆகிய நூல்களை எழுதினார்.
  • நேரு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1945ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி கைது செய்யப்பட்டார்.

நினைவிடங்கள் :

  • இந்தியா முழுவதும் நிறையப் பொதுநிறுவனங்கள் மற்றும் நினைவகங்கள் நேருவின் நினைவிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.
  • ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இந்தியாவின் பெருமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று.
  • மும்பை நகரத்தின் அருகில் உள்ளது ஜவஹர்லால் நேரு துறைமுகம்.
  • டெல்லியில் நேருவின் வசிப்பிடம், நேரு நினைவுக் கூடம் மற்றும் நூலகமாகப் பாதுகாக்கப்பட்டுள்ளது.
  • நேரு குடும்பத்தாரின் ஆனந்த பவன் மற்றும் சுராஜ் பவன் ஆகியவைகள் நேரு மற்றும் அவர் குடும்பத்தாரின் சட்டபூர்வமான நினைவகமாக இருக்கிறது.

எழுதிய நூல்கள்:

  • நேரு சிறந்த ஆங்கில எழுத்தாளராகத் திகழ்ந்தார்.அவர் எழுதிய நூல்கள் தி டிஸ்கவரி ஆஹ்ப் இந்தியா ,க்ளிம்ப்ஸ் ஆப் வேர்ல்ட் ஹிஸ்டரி அவருடைய  சுயசரிதை மற்றும் டுவார்ட்ஸ் ப்ரீடம்.
  • ஜவகர்லால் நேரு நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை 1938ம் ஆண்டு துவங்கினார். அப்பத்திரிகை 2008ம் ஆண்டு மூடப்பட்டது.

இறப்பு:

  • மே 27,1964ல் இறந்தார்.

ரவி சாஸ்திரி பிறந்த தினம்

பிறப்பு:

  • 27 மே 1962ல் பம்பாயில் பிறந்தார்.

சிறப்பு:

  • முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர் ஆவார்.அவர் ஒரு ஆல்-ரவுண்டர் ஆவார்.
  • அவர் வலதுகை பேட்டிங்கும், இடது கை சுழல் பந்தும் வீசுவார்.
  • அவரது சர்வதேசத் தொழில்வாழ்க்கையானது அவருக்கு 18 வயதிருக்கும் போது ஆரம்பித்து 12 ஆண்டுகள் வரை நீடித்திருந்தது ஒரு பேட்ஸ்மேனாக குறிப்பாய் அவரது நேர்த்தியான “சப்பாத்தி அடி” ஆனது (பிளிக் ஆப் த பேட்ஸ்) அவருக்கு அடையாள அடியாக இருந்தது.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!