முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-24

0

முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-24

வரலாற்றில் இன்று

 • 1974 – சைப்பிரசில் துருக்கியரின் படையெடுப்பின் பின்னர் சைப்பிரசின் இராணுவ அரசு கவிழ்க்கப்பட்டு, நாட்டில் மக்களாட்சி மீளமைக்கப்பட்டது.
 • 1977 – லிபியாவுக்கும் எகிப்துக்கும் இடையே இடம்பெற்ற 4-நாள் போர் முடிவுக்கு வந்தது.
 • 1982 – ஜப்பானில், நாகசாகியில் பெரும் வெள்ளம், மற்றும் மண்சரிவினால் 299 பேர்ர் கொல்லப்பட்டனர்.
 • 1991 – இந்திய அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது.
 • 2001 – கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுதலைப் புலிகளிளால் தாக்கப்பட்டதில் பல விமானங்கள் அழிக்கப்பட்டன.
 • 2007 – லிபியாவில் 400 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. கிருமிகளைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பல்கேரியத் தாதிகளையும் பாலஸ்தீன மருத்துவர் ஒருவரையும் லிபிய அரசு விடுதலை செய்தது.

பிறப்பு

அலெக்சாண்டர் டூமா

 • அலெக்சாண்டர் டூமா , {Alexandre Dumas, அலெக்சாண்டர் டூமாஸ், பிறப்பு டூமா டாவி டெலா பயெற்றி  (24 சூலை 1802 – 5 திசம்பர் 1870) அவரது சாகசமிக்க வரலாற்றுப் புதினங்களுக்காக உலகெங்கும் படிக்கப்படுகின்ற ஓர் பிரெஞ்சு எழுத்தாளர் ஆவார்.
 • த கௌன்ட் டெ மான்டி கிரிஸ்டோ, த த்ரீ மஸ்கிடீர்ஸ், ட்வென்டி இயர்ஸ் ஆஃப்டர், த வைகௌன்ட் டெ ப்ராக்லோன் உட்பட அவரது பல புதினங்கள் துவக்கத்தில் தொடர்கதைகளாக வெளிவந்தவை.
 • நாடகங்களும் இதழ்களில் கட்டுரைகளும் ஆசிரியருக்குக் கடிதங்களும் எழுதி வந்தார்.

இறப்பு

மார்ட்டின் வான் பியூரன்

 • மார்ட்டின் வான் பியூரன் (Martin Van Buren; திசம்பர் 5, 1782 – சூலை 24, 1862) ஒரு அமெரிக்க அரசியல்வாதியும், எட்டாவது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவரும் (1837–41) ஆவார்.
 • இவர் மக்களாட்சிக் கட்சியின் அங்கத்தவராகவும், முக்கிய பங்கு வகித்தவரும், எட்டாவது ஐக்கிய அமெரிக்காவின் துணை குடியரசுத் தலைவர் ஆகவும் (1833–37) அரச செயலளளராகவும் பதவி வகித்தார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here