முக்கியமான நிகழ்வுகள் ஜூலை-02

0

மயில்சாமி அண்ணாதுரை பிறந்த தினம்

பிறப்பு:

  • ஜூலை 2,1958ல் தமிழ்நாட்டில் பிறந்தார்.
By Ram 121 [Public domain], from Wikimedia Commons

சிறப்பு:

  • தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியலாளர். தற்போது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இயக்குனராகப் பணிபுரிகிறார்.
  • இவரே முதன்முதலில் இந்தியா நிலாவுக்கு ஆய்வுக்கலம் அனுப்பிய சந்திரயான்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர்.
  • அண்ணாதுரை இதுவரை ஐந்து முனைவர் பட்டங்களைப்பெற்றுள்ளார்.
  • இவர் இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.
  • இளைஞர்களுக்கு வழிகாட்டும் வகையில் “கையருகே நிலா” என்னும் தலைப்பில் தமது தொடக்க நாட்கள்,சந்திரயான் பணி ஆகியவை அடங்கும் நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
  • இந்தியாவின் முதல் செவ்வாய்ப் பயணம் பற்றிய தொடர் கட்டுரை ஒன்றை தமிழ் நாளிதழான தினத் தந்தியில் “கையருகே செவ்வாய்” என்ற தலைப்பில் வாரந்தோறும் ஞாயிறன்று எழுதிவருகிறார்.
  • தமிழகப் பள்ளிக்கல்வியின் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தில் மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு இடம் பெற்றுள்ளது ஒரு சிறப்பாகும்.
  • இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் செயற்கைகோள் மையத்திற்கு இயக்குநராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • ‘வளரும் அறிவியல்’ என்று தமிழில் வெளிவரும் அறிவியல் மாத இதழின் கௌரவ ஆசிரியர்.
  • தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை கொண்ட சிறந்த பேச்சாளர்,கவிஞர், கட்டுரையாளர்.

விருதுகள்:

மயில்சாமி அண்ணாதுரை இது வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட பரிசுகளைப் பெற்றுள்ளார்.

  • கர்மவீரர் காமராஜர் நினைவு விருது
  • பத்ம ஸ்ரீ விருது 2016, இந்தியாவில் மிக உயர்ந்த குடிமகன் விருதுகளில் ஒன்றாகும்.
  • நான்கு இந்திய விண்வெளி ஆய்வு விருதுகள்
  • சந்திரயான்-1 திட்டத்திற்காக மூன்று சர்வதேச விருதுகள்
  • ஆஸ்திரேலியா-இந்தியா இன்ஷ்டியூட்டின் மேல்னிலை விருது
  • சர்.சிவி.இராமன் நினைவு அறிவியல் விருது
  • ஹரி ஒம் ஆஷ்ரம் ப்ரடிட் விகரம் சாராபாய் அறியல் ஆய்வு விருது
  • கர்நாடக மாநிலஅரசின் அறிவியலுக்கான விருது
  • எச்.கே..ப்ரோடிய தேசிய அறிவியல் விருது
  • தேசிய ஏரோநாட்டிகல் அறிவியல் தொழில் நுட்ப விருது
  • ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி தேசிய அறிவியல் விருது
  • அமர பாரதி தேசிய அறிவியல் விருது
  • தேசிய தரமையத்தின் பஜாஃஜ் நினைவு விருது
  • கொங்குச் சாதனையாளர் விருது
  • தமிழ் மாமணி, திருப்பூர் தமிழ்ச்சங்கம்
  • அறிவியல் அண்ணா, கர்நாடகா தமிழ்பேரவை, ஹுப்ளி
  • டாக்டர் ராஜா சர் முத்தையா செட்டியார் பிறந்த நாள் நினைவுப் பரிசு 2012
  • சி.பா.ஆதித்தனார் இலக்கியப்பரிசு-2013

நிகழ்வுகள்

  • 1698 – தாமஸ் சேவரி முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.
  • 1853 – ரஷ்யா துருக்கியின் மீது படையெடுத்தது.கிரிமியப் போர் ஆரம்பமானது.
  • 1966 – பிரெஞ்சு இராணுவத்தினர் பசிபிக் பெருங்கடலில் அணுவாயுதச் சோதனையை நிகழ்த்தினர்.
  • 2004 – ஆசியான் அமைப்பில் பாகிஸ்தான் இணைந்தது.
  • 1578 – மார்ட்டின் புரோபிஷர் கனடாவின் பஃபின் தீவைக் கண்டார்.

பிறப்புகள்

  • 1862 – வில்லியம் ஹென்றி பிராக் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர்.
  • 1877 – ஹேர்மன் ஹெசே நோபல் பரிசு பெற்ற ஜெர்மனி எழுத்தாளர்.
  • 1925 – பத்திரிசு லுமும்பா கொங்கோவின் 1வது அரசுத்தலைவர்.
  • 1946 – ரிச்சார்ட் ஆக்செல் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர்

இறப்புகள்

  • 1757 – சிராச் உத் தவ்லா வங்காளத்தின் கடைசி நவாப்
  • 1961 – ஏர்னெஸ்ட் ஹெமிங்வே நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!