முக்கியமான நாட்கள் மற்றும் நிகழ்வுகள் – மார்ச் 2019

0

முக்கியமான நாட்கள் மற்றும் நிகழ்வுகள் – மார்ச் 2019

2019 நடப்பு நிகழ்வுகள்

இங்கு மார்ச் மாதத்தின் முக்கிய நாட்கள், கருப்பொருள் மற்றும் அன்றைக்கு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

முக்கியமான நாட்கள் மற்றும் நிகழ்வுகள் – மார்ச் 2019 Video 

கிளிக் செய்யவும்

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF – மார்ச் 2019

நாள்

தினம் முக்கிய நிகழ்வுகள்
மார்ச் 1 ஜீரோ பாகுபாடு தினம் ஜீரோ பாகுபாடு தினம் மார்ச் 1ம் தேதி அனுசரிக்கப்படுகிறது மற்றும் இதன் நோக்கம் உலகெங்கிலும் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு பிரச்சினையை தீர்ப்பது ஆகும். ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளிலும் சட்டத்திற்கு முன் சமத்துவத்தை அடைய வேண்டும் என்பதே இந்த தினத்தின் விருப்பமாகும்.
2019 கரு – ‘Act to change laws that Discriminate’
மார்ச் 3 உலக வனவிலங்கு நாள் டிசம்பர் 20, 2013 அன்று, 68 வது அமர்வில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் அருகி வரும் இனங்கள் மீதான சர்வதேச வர்த்தக உடன்படிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளான மார்ச் 3 ம் தேதியை உலக வனவிலங்கு நாளாக அறிவிக்க முடிவு செய்தது. உலகின் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் விழிப்புணர்வுக்காகவும் அதை கொண்டாடவும் தாய்லாந்தால் இது முன்மொழியப்பட்டது.
2019 கரு : “Life below water: for people and planet”
மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் சர்வதேச மகளிர் தினம் (மார்ச் 8), உலகில் பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சாதனைகளைக் கொண்டாடுகிறது. பாலின சமத்துவத்தை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைக்கு இந்த தினம் அழைப்பு விடுக்கின்றது.
2019 கரு – ‘Think Equal, Build Smart, Innovate for Change’
மார்ச் 14

 

உலக சிறுநீரக தினம்

 

சிறுநீரகங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சிறுநீரக நோய்களின் பாதிப்பு மற்றும் தாக்கத்தை குறைப்பதற்காக மார்ச் மாதத்தில் இரண்டாவது வியாழக்கிழமை அன்று உலக சிறுநீரக தினம் அனுசரிக்கப்படுகிறது. தீம், ‘அனைவருக்கும் எல்லா இடங்களிலும் சிறுநீரக ஆரோக்கியம்’.
2019 கரு: ‘Kidney Health for Everyone Everywhere’
மார்ச் 15 உலக உறக்க தினம் உலகளாவிய உறக்க சமூகத்தால் உருவாக்கிய இந்த உலக உறக்க தினம், உறக்கத்தின் முக்கியத்துவம் மற்றும் அதனால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் ஆராய்ச்சியாளர்கள், உடல்நல வல்லுநர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உறக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.
2019 கரு: ‘Healthy Sleep, Healthy Aging,’
மார்ச் 21 இனவாத பாகுபாடை நீக்குவதற்கான சர்வதேச தினம் இனவாத பாகுபாடை நீக்குவதற்கான சர்வதேச தினம் ஆண்டுதோறும் 21 மார்ச் அன்று அனுசரிக்கப்படுகிறது. 1966 ஆம் ஆண்டு இந்த தினத்தை ஐ.நா. பொதுச் சபை பிரகடனப்படுத்தியது. சர்வதேச சமூகம் அனைத்து வகையான இனப் பாகுபாட்டையும் அகற்றும் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்று கோரியது.
2019 கரு: Mitigating and countering rising nationalist populism and extreme supremacist ideologies
மார்ச் 21 உலக கவிதை தினம் உலகக் கவிதை தினம் 21 மார்ச் அன்று கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோவால் (ஐ.நா. கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாச்சார அமைப்பு) 1999 ஆம் ஆண்டில் இந்த தினம் அறிவிக்கப்பட்டது. அதன் நோக்கம் உலகம் முழுவதும் கவிதை வாசிப்பு, எழுத்து, வெளியீடு மற்றும் போதனைகளை ஊக்குவிப்பதாகும்.
மார்ச் 21 உலக டவுன் சிண்ட்ரோம் தினம் உலக டவுன் சிண்ட்ரோம் தினம் (WDSD) மார்ச் 21 ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் வாழும் மற்றும் வேலை செய்யும் டவுன் சிண்ட்ரோம் பாதித்த மக்கள் குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், டவுன் சிண்ட்ரோம் கொண்ட மக்களின் உரிமைகள், அவர்களின் நன்மைக்காக ஒரு உலகளாவிய குரலை உருவாக்கவும் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
மார்ச் 21 சர்வதேச காடுகள் தினம் ஐ.நா. பொதுச் சபை 2012ஆம் ஆண்டில் 21 மார்ச்-ஐ சர்வதேச காடுகள் (ஐ.டி.எஃப்) தினமாக அறிவித்தது. இந்த தினம் அனைத்து வகையான காடுகளின் முக்கியத்துவத்தையும் அது பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்த கொண்டாடப்படுகிறது.
 2019 கரு – Forests and Education.
மார்ச் 22 உலக தண்ணீர் தினம் ஐ.நா. சபை கடந்த 1992-ம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த கூட்டத்தை கூட்டியது. கூட்டத்தில், நீர்வள பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், அதை மக்களிடம் உணர்த்த `உலக தண்ணீர் தினம்’ கொண்டாடப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் மார்ச் 22-ந் தேதி உலக தண்ணீர் தினம் சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
2019 கரு – ‘Leaving no one behind’
மார்ச் 23

 

உலக வானியல் தினம்

 

1950 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி உலக வானியல் அமைப்பை ஸ்தாபிப்பதற்கான மாநாடு நடைமுறைக்கு வந்ததை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 அன்று, உலக வானியல் தினம் கொண்டாடப்படுகிறது.
2019 கரு – The Sun, the Earth and the Weather.
மார்ச் 24 உலக காசநோய் தினம் டாக்டர் ராபர்ட் கோச் 1882 ஆம் ஆண்டில் இதே தினத்தில் TB ஐ ஏற்படுத்தும் பாக்டீரியாவை கண்டுபிடித்ததாக அறிவித்தார். உலகெங்கும் மரணத்தின் முதல் பத்து காரணங்கள் காசநோய் ஒன்று ஆகும். இந்தியா 2025 ஆம் ஆண்டில் TB ஐ முழுமையாக ஒழிக்க தனது நோக்கங்களையும் புதுப்பித்துள்ளது.
2019 கரு – ‘It’s time’.
மார்ச் 25 அடிமை முறை மற்றும் அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்தின் சர்வதேச நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 25 ம் தேதி அடிமை முறை மற்றும் அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்தின் சர்வதேச நினைவு நாள் நினைவுகூறப்படுகிறது இது 2007 முதல் ஐக்கிய நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது.
2019 கரு – “Remember Slavery: The Power of the Arts for Justice”
மார்ச் 27 உலக தியேட்டர் தினம் 2019

சர்வதேச தியேட்டர் இன்ஸ்டிடியூட் (ITI) மூலம் 1961 ஆம் ஆண்டில் உலக தியேட்டர் தினம் தொடங்கப்பட்டது. ஐ.டி.ஐ மையங்கள் மற்றும் சர்வதேச நாடக சமுதாயத்தால் மார்ச் 27 அன்று இது ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

PDF Download

பொது அறிவு பாடக்குறிப்புகள்  PDF Download

பாடம் வாரியான குறிப்புகள் PDF Download

To Follow  Channel – கிளிக் செய்யவும்

Whatsapp குரூப்பில் சேரகிளிக்செய்யவும்

Telegram Channel ல் சேர கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!