முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 07, 2018

0

முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள்- மார்ச் 07, 2018

  • மெக்சிகோவில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் 10m Air Pistol பெண்கள் பிரிவில் 15 வயதான இந்தியாவின் “மனு பாக்கெர்” (Manu Baker) தங்கம் வென்றுள்ளார். ஆண்கள் 10m Air rifle பிரிவில் இந்தியாவின் “ரவிகுமார்” வெண்கலம் வென்றுள்ளார்.
  • இந்தியா – இஸ்ரேல் உறவுகள் பற்றி “தருண் விஜய்” எழுதிய சிறப்பு இதழான (Magazine) “Namaste Shalom” டெல்லியில் வெளியிடப்பட்டது.
  • அரசு பள்ளி மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 6 முதல் 12 வரையிலும். பெண்களுக்கு “இலவச நாப்கின்” (Free Sanitary Napkins) வழங்கும் “குஷி” (Khushi) திட்டத்தை ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தொடங்கிவைத்தார்.
  • பிராங்கிபுரம் ரயில் நிலையம் (Phirangipuram) பெண்களால் முழுவதும் நிர்வகிக்கும் ஆந்திராவின் முதல் ரயில் நிலையம் ஆகும்.
  • முதலாவது ஸ்நூக்கர் டிம் கோப்பை போட்டிகளில் (World Snooker Team Cup 2018) இந்தியாவின் பங்கஜ் அத்வானி மற்றும் மன்னன் சந்திரா பாகிஸ்தான் அணியை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார்.
  • தேசிய சீனியர் தடகள சாம்பியன்சிப் போட்டியில் ஆடவருக்கான போல்ட்வால்ட் (Pole Vault) பிரிவில் தமிழக வீரர் சுப்பிரமணி சிவா” தேசிய சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார்.
  • உலகின் முதல் அணு சக்தியால் இயங்கும் விமானத்தை “மக்னாவம்” விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். இதன் பொருள் “மாக்னாவம்” என்ற இலத்தீன் சொல்லுனக்கு தமிழில் பெரிய பறவை என்று பெயர். Zero Carbon என்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • உலகின் சக்தி வாய்ந்த ராணுவங்களை கொண்ட நாடுகளின் பட்டியல் (Global Fire Power list 2017) ராணுவ வளங்கள், இயற்கை வளங்கள், தொழில் மற்றும் புவிசார் அம்சங்கள், மனிதசக்தி ஆகிய 50 முக்கிய அம்சங்கள் அடங்கும். இதில் 133 நாடுகள் இடம் பிடித்துள்ளது. இதில் 1வது USA, 2வது ரஷ்யா, 3வது சீனா, 4வது இந்தியா 5வது பிரான்ஸ் ஆகும்.
  • பிரிட்டனின் பயங்கரவாத தடுப்பு அமைப்பின் (Counter Terrorism Policing ) தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்து வரும், ஸ்காட்லாந்து யார்டு காவல்துறை அதிகாரியுமான “நீல் பாசு” நியமிக்கப்பட்டுள்ளார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!