தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் வழங்குதல் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் புதிய தகவல்!

0
தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் வழங்குதல் குறித்த முக்கிய அறிவிப்பு - அமைச்சர் புதிய தகவல்!
தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் வழங்குதல் குறித்த முக்கிய அறிவிப்பு - அமைச்சர் புதிய தகவல்!
தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் வழங்குதல் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் புதிய தகவல்!

தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில் சில காரணங்களால் 3 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. இது குறித்து அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முதியோர் ஓய்வூதியம்

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி முதியோருக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து அறிவிப்பு நிலையில் அதிமுக ஆட்சியில் இந்த ஓய்வூதியம் 3 லட்சம் பேருக்கு நிறுத்தப்பட்டது. இது குறித்து நேற்று நடைபெற்ற சட்டப்பேரவையின் வருவாய் துறை மானிய கோரிக்கையின் மீது விவாதம் நடத்தப்பட்டது. அதில் அதிமுக சார்பில் ஆர். காமராஜ் பேசுகையில் அதிமுக ஆட்சியில் 5 லட்சம் முதியோருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அது 90 சதவிகிதமாக வழங்கப்பட்டது. மேலும் திமுக ஆட்சியில் ரூ. 500 ஆக இருந்த ஓய்வூதியம் ரூ. 1000ஆக உயர்த்தப்பட்டது. மேலும் திமுக ஆட்சியில் 4 லட்சம் பேருக்கு ரூ.1,200 கோடியாக ஒதுக்கப்பட்ட தொகை, எங்கள் ஆட்சியில் ரூ.4,200 கோடியாக உயர்த்தப்பட்டது என.தெரிவித்தார்

மெட்ரோ பயணிகளுக்கான புதிய வசதி – பெண்களே இயக்கும் இணைப்பு வாகனங்கள்!

அதற்கு பதில் அளித்த அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் முன்னாள் முதல்வர் கருணாநிதி ரூ. 35 ஆக இருந்த ஓய்வூதியத்தை ரூ. 500 ஆக உயர்த்தினார் எனவும், 2014-15ஆம் ஆண்டில் 4.38 லட்சம் பேர், அதற்கடுத்த 7 ஆண்டுகளில் 15.20 லட்சம் பேர் நீக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்கள் இரட்டைப் பதிவுகள், இறந்தவர்கள், ரூ.10 லட்சத்துக்கு அதிகமான மதிப்பில் சொத்து வாங்கியவர் என விளக்கம் கொடுத்து இருக்கிறார். மேலும் முதியோர் ஓய்வூதியம் வழங்காமல் நீக்கப்பட்ட 3 லட்சம் பேரில் விவரங்கள் சரிபார்க்கப்பட்டதில் 1.60 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கியதாகவும், மீதி இருப்பவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு ஓய்வூதியம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!