அண்ணா பல்கலையில் மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பு – ஜூன் 22 முதல் விண்ணப்ப பதிவு!

0
அண்ணா பல்கலையில் மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பு - ஜூன் 22 முதல் விண்ணப்ப பதிவு!
அண்ணா பல்கலையில் மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பு - ஜூன் 22 முதல் விண்ணப்ப பதிவு!
அண்ணா பல்கலையில் மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பு – ஜூன் 22 முதல் விண்ணப்ப பதிவு!

தமிழகத்தில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து பள்ளிகளில் திட்டமிட்டபடி பொதுத்தேர்வு நடந்து முடிவடைந்துள்ளது. மேலும் கல்லூரிகளிலும் தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது.

மாணவர் சேர்க்கை

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரிவர இயங்கப்படவில்லை. இதனை தொடர்ந்து தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து தற்போது திட்டமிட்டபடி பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிவடைந்துள்ளது. இந்த ஆண்டு தாமதமாக கல்வியாண்டு தொடங்கப்பட்டதால் வரும் கல்வியாண்டு விரைவில் தொடங்கப்பட வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து தற்போது பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் 2022-2023ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை தொழில் நுட்பக்கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒருங்கிணைந்த M.SC படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை தனியாக நடைபெறும்.

தமிழக அரசு பேருந்துகளில் அனைவருக்கும் இலவச பயணம் – முக்கிய கோரிக்கை முன்வைப்பு!

அதன்படி 5 ஆண்டுகள் M.SC படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை வருகிற ஜூன் 22 முதல் ஜூலை 20ம் தேதிகளில் விண்ணப்ப பதிவு நடைபெற உள்ளது. அத்துடன் தொழில் நிறுவனங்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் கீழ் படிப்புகளில் சேர வருகிற ஜூன் 24 முதல் ஜூலை 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த படிப்பில் இணைய விரும்பும் மாணவர்கள் www.annauniv.edu என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற 044 2235 8314 என்ற தொலைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here