திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வோர் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை செல்வோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை சீரமைப்பு பணிகள் முடிந்ததையொட்டி அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய நடைபாதைகள் வழியாக திவ்ய தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு முன்பதிவு டோக்கன் விரைவில் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில்:

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவல் அதிகமாக இருந்ததன் காரணமாக இந்தியாவில் உள்ள எந்த வழிபட்டு தளங்களிலும் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்த காரணத்தினால் அனைத்து வழிபாட்டு தளங்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், வழக்கம் போல திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கபிரதட்சணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

மேலும், சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, நிஜபாத தரிசனம் அஷ்டதள பாத பத்ம ஆராதனை, கல்யாண உற்சவம் ஊஞ்சல் சேவை முதலிய ஆர்ஜித சேவைகள் அனைத்திற்கும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டுள்ளதால் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று மட்டுமே திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 75,016 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும், 32,116 பேர் முடி காணிக்கை செய்துள்ளனர். ரூ.3.59 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக வசூலாகியுள்ளது.

லோன் வாங்கி இருப்போர் கவனத்திற்கு – வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு!

திருப்பதி திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை சீரமைப்பு பணிகள் முடிந்ததையொட்டி ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய நடைபாதைகள் வழியாக திவ்ய தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு டைம் ஸ்லாட் முன்பதிவு முறை டோக்கன்கள் விரைவில் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!