விமான பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – இனி தடுப்பூசி அவசியம் இல்லை!
கனடாவில் உள் மற்றும் வெளிநாட்டு பயணங்களின் போது பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லை என்று அந்நாட்டு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும், ஜூன் 20ம் தேதி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக அனைத்து நாடுகளும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்து அதனை மக்களுக்கும் செலுத்தும் பணியை தொடங்கினர். கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி துரிதமாக நடைபெற்றது. பொது இடங்கள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டது. மேலும் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிப்போர்களுக்கு இரண்டு டோஸ் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் விமானங்களில் பயணம் செய்ய மறுக்கப்பட்டனர்.
TN Job “FB
Group” Join Now
இந்த கொரோனா தடுப்பூசி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்று பாதிப்பில் இருந்து உடலை பாதுகாத்தது. இதனையடுத்து தினசரி பாதிப்புகள் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இதனால் அரசுகளும் பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. அதனால் மக்கள் மீண்டும் தனது இயல்பு வாழ்க்கையை நோக்கி சென்று வருகின்றனர். அதே நேரம் கொரோனா முழுமையாக குறையாத காரணத்தினால் மக்கள் தொடர்ந்து கொரோனா நோய்த் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியது.
தமிழக ரயில்வே பயணிகள் கவனத்திற்கு – மதுரை டூ காசி இடையே தனியார் ரயில் இயக்க திட்டம்!
இந்த நிலையில் கனடாவில் வெளிநாட்டு பயணங்களின் போது பயணிகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமில்லை என்று அந்நாட்டு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. விமானம் மற்றும் ரயில்களில் பயணம் செய்ய தடுப்பூசி தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தளர்வு ஜூன் 20ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. ஆனாலும் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.