தமிழகத்தில் மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

0
தமிழகத்தில் மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது!
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவனத்தில்  (IISWC) காலியாக உள்ள Project Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. திட்ட உதவியாளர் பணிக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 22-01-2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு வேலைவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் IISWC
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.01.2024
விண்ணப்பிக்கும் முறை Interview

IISWC காலிப்பணியிடங்கள்:

Project Assistant  பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

 Assistant கல்வி தகுதி:

IISWC அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் B.Sc முடித்திருக்க வேண்டும்.

IISWC வயது வரம்பு:

இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவன ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 50 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

 தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

திட்ட உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழகத்தில்  வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் முகவரியில் முழு பயோ-டேட்டா, தேவையான சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி) நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறலாம்.

நேர்காணலை நடைபெறும் இடம்:   Indian Institute of Soil and Water Conservation, Theetukal, Fernhill Post, Udhagamandalam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!