தமிழக அரசு கேபிள் டிவி பயன்படுத்துபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அறிவிப்பு!

0
தமிழக அரசு கேபிள் டிவி பயன்படுத்துபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அறிவிப்பு!
தமிழக அரசு கேபிள் டிவி பயன்படுத்துபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அறிவிப்பு!
தமிழக அரசு கேபிள் டிவி பயன்படுத்துபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அறிவிப்பு!

தமிழக அரசின் மூலம் நடத்தப்பட்டு வரும் செட் டாப் பாக்ஸ்களின் ஒளிபரப்பில் தடங்கல்கள் ஏற்படுவதாக புகார்கள் வருகின்றன. இதன் காரணமாக இதனை சரி செய்யும் முயற்சியில் அரசு கேபிள் டிவி நிறுவனம் இயங்கி வருவதாக தகவல் தெரிவித்துள்ளது.

அரசு கேபிள் நிறுவனம்:

இந்தியாவில் தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வருகிறது. இதனால் புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி வருகின்றது. முந்தைய காலத்தில் இத்தகைய தொழில் நுட்பங்கள் மிகவும் அரிதான ஒன்றாக இருந்து வந்தது. தற்போது தொலைக்காட்சி முதல் செல்போன் வரை அனைத்தும் அட்வான்ஸ் சிஸ்டமாக இயங்கி வருகிறது. மக்களும் அதற்கேற்றவாறு புதுமையான சேவைகளையே அதிகம் விரும்புகின்றனர். மேலும் கொரோனா காலத்தில் மக்கள் அதிகம் வீடுகளிலேயே முடங்கி கிடந்ததால் தொலைக்காட்சி மூலம் தங்களது பொழுதை கழித்து வந்தனர்.

இதன் காரணமாக தமிழக அரசு மக்களுக்கு கட்டணமின்றி இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200க்கும் மேற்பட்ட சேனல்களை குறைந்த மாத கட்டணத்திற்கு வழங்கி வருகிறது. இது மற்ற தனியார் கேபிள் நிறுவனங்களை விட குறைவான கட்டணமாகும். அதாவது தமிழக அரசு குறைந்த கட்டணத்தில் அதிக சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் இதனை பொதுமக்கள் அந்தப் பகுதியில் உள்ள அரசு கேபிள் டிவி சேவையை வழங்கும் ஆப்ரேட்டரிடம் கேட்டுப் பெறலாம். இதில் ஏதேனும் புகார்கள் இருக்கும் பட்சத்தில் அரசு தெரிவித்துள்ள தொலைபேசி எண் மூலம் மக்கள் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோபியை திருமணம் செய்ய மறுக்கும் ராதிகா, நிம்மதியில் பாக்கியா – ‘பாக்கியலட்சுமி’ ட்விஸ்ட்!

இதை தொடர்ந்து தமிழகத்தில் அதிகமான மக்கள் அரசின் கேபிள் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த சேவையில் அதிகமான பொழுது போக்கு சேனல்கள் இருப்பதால் மக்கள் அதிகம் இந்த இணைப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அரசு நடத்தும் கேபிள் சேவைகளின் ஒளிபரப்பில் தடங்கல்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, தொழில்நுட்ப பிரச்சனையை சரி செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் எனவும் அரசு கேபிள் டிவி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here