மத்திய அரசில் தேர்வில்லாத வேலை வாய்ப்பு – ரூ.35,000/- சம்பளம்!

0
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை வாய்ப்பு - ரூ.35,000/- சம்பளம்!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை வாய்ப்பு - ரூ.35,000/- சம்பளம்!
மத்திய அரசில் தேர்வில்லாத வேலை வாய்ப்பு – ரூ.35,000/- சம்பளம்!

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் (ICMR-NIN) காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Project Supervisor மற்றும் Project Field Worker ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ரூ.35,000/- வரை மாத ஊதியமாக தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Nutrition (ICMR-NIN)
பணியின் பெயர் Project Supervisor and Project Field Worker
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

தேசிய ஊட்டச்சத்து நிறுவன காலிப்பணியிடங்கள்:

  • Project Supervisor – 01 பணியிடமும்,
  • Project Field Worker – 04 பணியிடங்களும் என மொத்தமாக 05 பணியிடங்கள் தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் (ICMR-NIN) காலியாக உள்ளது.
Exams Daily Mobile App Download

தேசிய ஊட்டச்சத்து நிறுவன கல்வி விவரம்:

  • Project Supervisor பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Nutrition, Food Science, Social Work போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Master Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Project Field Worker பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் NET தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்கலாம்.

தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் வயது வரம்பு:

  • Project Supervisor பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Project Field Worker பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • SC / ST – 05 ஆண்டுகள் மற்றும் OBC – 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது.

ICMR-NIN சம்பளம்:

  • Project Supervisor பணிக்கு ரூ.35,000/- என்றும்,
  • Project Field Worker பணிக்கு ரூ.20,000/- என்றும் மாத சம்பளமாக கொடுக்கப்படும்.

ICMR-NIN தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 04.08.2022 அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR-NIN விண்ணப்பிக்கும் விதம்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணல் நடைபெறும் நாள் அன்று நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு தகுதியான நபர்கள் அனைவரும் இந்த நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF Link

Application Form Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!