M.Sc டிகிரி முடித்தவரா? உங்களுக்கான மத்திய அரசு வேலை || தேர்வு கிடையாது..!

0

M.Sc டிகிரி முடித்தவரா? உங்களுக்கான மத்திய அரசு வேலை || தேர்வு கிடையாது..!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (ICMR NIN) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் National Institute of Nutrition (ICMR NIN)
பணியின் பெயர் Junior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.06.2022
விண்ணப்பிக்கும் முறை Email

 

ICMR NIN காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தில் தற்போது Junior Research Fellow பதவிக்கு என்று ஒரே ஒரு பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

ICMR NIN கல்வித் தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Biochemistry / Biotechnology / Microbiology / Molecular Biology / Nutrition பாடப்பிரிவில் M.Sc டிகிரி அவசியம் முடித்திருக்க வேண்டும்.

ICMR NIN வயது வரம்பு:

இப்பணிக்கு அதிகபட்ச வயது வரம்பாக 26 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பதாரர்கள் 18.05.2022 ம் தேதியின் படி, அவசியம் 26 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமாகும்.

ICMR NIN ஊதிய விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தும் போது ICMR ஊதிய விதிமுறைகளுக்கு உட்பட்டு பணிக்கு ஏற்றார்ப்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ICMR NIN தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் அல்லது கலந்தாய்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

ICMR NIN விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 20.05.2022 ம் தேதி மாலை 5.30 மணிக்குள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் விண்ணப்பங்களை தயார் செய்து அறிவிப்பில் கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

ICMR NIN Notification PDF

ICMR NIN Application PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!