ரூ.17,000/- சம்பளத்தில் கிளார்க் வேலைவாய்ப்பு – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி..!
தேசிய தொற்று நோயியல் நிறுவனம்-ஐசிஎம்ஆர் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி, Lower Division Clerk மற்றும் Data Entry Operator பணிக்கு 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 02.02.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தேசிய தொற்று நோயியல் நிறுவனம் வெளியிடப்பட்ட அறிவிப்பில் Lower Division Clerk மற்றும் Data Entry Operator பணிக்கு என்று தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
TNPSC No.1 Coaching Center – Join Immediately
- இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
- Data Entry Operator பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.17,000/- மற்றும் Lower Division Clerk பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.16,000/-மும் மாத ஊதியம் வழங்கப்படும்.
- இப்பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICMR-NIE விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப் பூர்வ அறிவிப்பில் கொடுத்துள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேர்காணலின் போது கொண்டு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.