ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஃபிக்சட் டெபாசிட் வட்டி உயர்வு!

0
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ஃபிக்சட் டெபாசிட் வட்டி உயர்வு!
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - ஃபிக்சட் டெபாசிட் வட்டி உயர்வு!
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஃபிக்சட் டெபாசிட் வட்டி உயர்வு!

மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி தற்போது தனது வாடிக்கையாளர்களுக்காக ஃபிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது. மேலும், இந்த வட்டி விகிதம் நேற்றில் இருந்து அமலுக்கு வந்துள்ளது.

ICICI வங்கி:

எஸ்பிஐ, ஐசிஐசிஐ முதலான பல வங்கிகள் பிக்சட் டெபாசிட்டிற்கான வட்டி விகிதங்களை அவ்வப்போது அதிகரித்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 2 கோடி ரூபாய்க்கு மேலான டெபாசிட்களின் வட்டி விகிதத்தை 20 முதல் 40 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியது. இந்நிலையில் இந்தியாவிலேயே மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ தனது வாடிக்கையாளர்களை பிக்சட் டெபாசிட் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் 2 கோடிக்கு மேல் 5 கோடிக்குள் உள்ள டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? கொரோனா நான்காம் அலை எதிரொலி!

அதாவது 2 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட்டுகளுக்கு குறைந்தபட்சம் 2.50% வட்டியும், அதிகபட்சமாக 4.65% வட்டியும் வழங்குவதாக ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் நேற்றில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. அதாவது 7 முதல் 14 நாட்களுக்கு 2.50% வட்டியும், 15 முதல் 29 நாட்களுக்கு 2.50% வட்டியும், 30 முதல் 45 நாட்களுக்கு 2.75 % வட்டியும், 46 முதல் 60 நாட்களுக்கு 2.75 % வட்டியும் வழங்கப்படுகிறது.

மேலும், 61 முதல் 90 நாட்களுக்கு 3 % வட்டியும், 91 முதல் 120 நாட்களுக்கு 3.35% வட்டியும், 121 முதல் 150 நாட்களுக்கு 3.35% வட்டியும், 185 முதல் 210 நாட்களுக்கு 3.60% வட்டியும், 211 முதல் 270 நாட்களுக்கு 3.60% வட்டியும், 271 முதல் 289 நாட்களுக்கு 3.70% வட்டியும், 290 முதல் 364 நாட்களுக்கு 3.70% வட்டியும், 364 முதல் 389 நாட்களுக்கு 4.20% வட்டியும், 390 நாள் முதல் 15 மாதங்களுக்கு 4.20% வட்டியும், 15 மாதம் முதல் 18 மாதங்களுக்கு 4.25% வட்டியும், 18 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரையும் 4.35% வட்டியும், 2 ஆண்டு 1 நாள் முதல் 3 ஆண்டுகளுக்கு 4.55% வட்டியும், 3 ஆண்டு 1 நாள் முதல் 5 ஆண்டுகளுக்கு 4.65% வட்டியும், 5 ஆண்டு 1 நாள் முதல் 10 ஆண்டுகளுக்கு 4.65% வட்டியும் வழங்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!